இதில் மருத்துவமனைக்கு தொடர்பிருந்தால் அங்கீகாரம் ரத்தாகும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சிறுமியின் கருமுட்டை விற்பனை விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை என மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கவால்துறையினர் சிறுமியின் தாயார் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலியை கைது செய்தனர். கருமுட்டை விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட டைலர் மாலதி என்பவரையும் … Read more

பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு..!-பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழப்பு..!

ஈரோடு மாவட்டத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மணியன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வயது 52. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் கவுந்தபாடியிலிருந்து பெருந்துறைக்கு பேருந்தில் பயணிகளோடு புறப்பட்டுள்ளார். சென்று கொண்டிருக்கும் பொழுது வெள்ளாங்கோயில் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பேருந்தை இயக்கும் பொழுது அவருக்கு … Read more

ஈரோடு மாவட்டம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி 4 பேர் பலி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது, மேலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களில் மட்டுமே பேருந்து இயங்க அனுமதி என அறிவித்தார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து ஒன்று மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

பவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு!

நாளை முதல் 15 ஆம் தேதி வரை பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டதில் உள்ள பவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் 241.62 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுவதால், கோபி, பவானி, அந்தியூரில் உள்ள 24,505 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்காக நீர் … Read more

கலெக்டர் அலுவலகத்தை நோக்கி திரண்ட வடமாநிலத்தவர்கள்.! போலீசார் விரட்டியதால் பரபரப்பு.!

சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு 200 பேருக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் நோக்கிசென்றதால் அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம், வைராபாளையம், அசோகபுரம், பெரிய அக்ரஹாரம், சுண்ணாம்பு ஓடை, மரவாபாளையம், சடையம்பாளையம், ராசாம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, கங்காபுரம் ஆகிய பகுதிகளை சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.  இங்கு வடமாநிலத்தவர்கள் பலர் வேலை செய்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காததால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக … Read more

ஈரோட்டில் பப்ஜி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு.!

ஈரோட்டில் பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார்.  நாடு முழுவதும் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் எல்லாம் வீடுகளில் முடங்கி உள்ள்ளனர். இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் இளைஞர்கள் தங்கள் பொழுதை போக்க ஆன்லைன் விளையாட்டான  பப்ஜி மற்றும் லூடோ ஆகிய விளையாட்டுகள் பிரபலமாக விளையாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கமலா … Read more

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911-ஆக உள்ளது. இதுவரை 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்துள்ளார். அந்த முதியவருக்கு ஏற்கனவே சர்க்கரை, மூளை நரம்பு பாதிப்பு ஆகிய உடல் பிரச்சனைகள் இருந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். முதியவருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால், அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து நாட்டவர் 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வட்டாச்சியர்.!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.  இந்நிலையில், தாய்லாந்து நாட்டிலிருந்து 6 பேரில், சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொள்ளம்பாளையத்தில் மதபிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் மூலமாக இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொற்று அறியப்பட்டது. இதனால் இவர்கள் 6 பேர் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் … Read more

தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த நோயானது, மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியுள்ளது. இதன் பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  இதன் பாதிப்பு மற்ற நாடுகளில் பரவி வருகின்ற நிலையில், அந்தந்த நாட்டு அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில், 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்திலும் 9 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் … Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் விபரங்களை கட்டாயம் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்! ஈரோடு கலெக்டர் உத்தரவு..!

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அணைத்து காளைகளில் விபரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யாத காளைகள், போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாது. ஈரோடு அருகே பவளத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 18ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் காளையின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காளை உரிமையாளர்கள் அருகில் … Read more