இந்த செமஸ்டர் தேர்வில் கட்டணம் உயர்த்தப்படாது.. அமைச்சர் பொன்முடி கொடுத்த விளக்கம்!

ponmudi

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆகவும்,இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், ஆய்வு கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 … Read more

மாணவர்கள் கடும் அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு! முழு விவரம்..

Anna University

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் உயர்வால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், இதுபோன்று முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை … Read more

இன்று முதல் ஆரம்பமானது என்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்புகள்.! ஆர்வத்துடன் செல்லும் மாணவர்கள்…

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று முதல் தொடக்கம். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு இன்று முதல் தொடங்கியது. கலந்தாய்வில் 58,307 இடங்கள் நிரப்பட்ட நிலையில், பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியுள்ளது. வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று … Read more

அரியர் மாணவர்களுக்கு நற்செய்தி! மீண்டும் ஓர் வாய்ப்பளித்த அண்ணா பல்கலைகழகம்.!

அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.  2001-02 முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால் நடைபெறவுள்ள தேர்வில் பகிர்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரியர் எழுதவுள்ள … Read more

பொறியியல் மாணவர்களே ரெடியா? – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு டிச.8 முதல் செமஸ்டர் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் செமஸ்டர் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

B.Arch., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! அக்.8 முதல் கலந்தாய்வு..

பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு என அறிவிப்பு. B.Arch., படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ளது. 2,491 பேர் விண்ணப்பித்ததில் 1,651 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,609 இடங்களுக்கு 1,651 பேர் போட்டி நிலவுகிறது. பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், www.tneaonline.org என்ற இணையதளத்தை அணுகலாம். குறைகளை நிவர்த்தி செய்ய நாளையும், நாளை மறுநாளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் … Read more

இவர்களும் நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான 3வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் 13ம் தேதி 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார். மேலும், 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும் … Read more

இன்ஜினீயரிங் மாணவர்கள் கவனத்திற்கு…! இன்றே கடைசி நாள்…!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இடம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 14,524 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் சுற்றில் 12 ஆயிரத்து, 591 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டை, 6,277 பேர் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீடு பெற்றனர். மேலும், 4,430 பேர் … Read more

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது…!

இன்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தது. இரண்டு தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில், இன்று பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரியில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில், இன்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வு … Read more

புதிய பாடத்திட்டம் – வரும் 17-ம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக வரும் 17-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. பொறியியல் பாடத் திட்டங்கள் நடப்பாண்டில் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டங்களை வகுத்துள்ளது. முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. மாற்றிஅமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது என்றும் இதற்கு முன்னதாக கல்வி மானியக் குழுவில் ஒப்புதல் பெற … Read more