வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் -சத்யபிரதா சாஹூ

மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எண்ணிக்கை மையத்தில்  வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று பெண் தாசில்தார் உள்ளிட்ட சிலர் காலை 3 மணியளவில் அனுமதியில்லாமல் சென்று இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்து சில தகவல்களை சேகரித்ததாக செய்திகள் வந்தது. இந்த விவகாரத்தில் பெண் தாசில்தார் சம்பூர்ணம் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்தனர்.இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இரவில் அதிகாரி நுழைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தங்க தமிழ்ச்செல்வன் கூறுகிறார். மேலும் வாக்கு எண்ணும் … Read more

ஒரே கிராமத்தில் 100 பேரின் பெயர் ஒரே மாதிரி இருப்பதால் குழப்பம் அடையும் தேர்தல் அதிகாரிகள்

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.நாளை தமிழகத்தில் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாப்பணம் கிராமத்தில் ஒரே பெயரை கொண்ட 100 பேர்கள் உள்ளதால் தேர்தல் வரும் போது தேர்தல் அதிகாரிகள் ஓவ்வொரு முறையும் குழப்பம் … Read more

அமமுக அலுவலகத்தில் திடீர் சோதனை! போலீஸ் துப்பாக்கியால் சுட்டனர்

தமிழகத்தில் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களாக தேர்தல் பறக்கும் படை  பல முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படை சென்ற போது தொண்டர்கள் தடுத்ததால் காவல்துறை திடீரென 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயமில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

நாளை மாலை 6 மணி முதல் இவை அனைத்திற்கும் அனுமதி கிடையாது -தேர்தல் ஆணையம் உத்தரவு

வருகின்ற 18-ம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. நாளை மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது. மேலும்  நாளை மாலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் … Read more

ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதும் இல்லை , பொறுமையும் இல்லை -சரத்குமார் விமர்சனம்

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் அனைத்து காட்சினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதில்லை , அப்படியே வந்தாலும் பொறுமையாக  இல்லாமல் வெளிநடப்பு செய்து விடுவார் என சரத்குமார் விமர்சனம் செய்தார். மேலும் கடந்த கால காங்கிரஸ் … Read more

வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.அதில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி … Read more

நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையினரை விட்டு முதுகில் குத்துகின்றனர்-துரைமுருகன்

எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையினரை விட்டு முதுகில் குத்துகின்றனர் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. எனவே நேற்று இரவு 11 மணி அளவில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை  சோதனை நடத்த சென்றனர்.ஆனால் … Read more

நானும் விவசாயி என்பதால் நீராதாரங்களை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்-முதல்வர் பழனிச்சாமி

நானும் விவசாயி என்பதால் நீராதாரங்களை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்  என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.அதேபோல்  தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரில் அதிமுகவேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,நானும் விவசாயி என்பதால் நீராதாரங்களை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். 3200 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன … Read more

ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவல்

ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் தினகரன் கட்சி பதிவு செய்யப்படாத கட்சி,இதனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தது.இதன் பின்னர் நடைபெற்ற  விசாரணையில் உச்ச நீதிமன்ற … Read more

இந்தியாவில் ரூ.1253 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!ரூ.153 கோடியுடன் தமிழகம் முதலிடம்

இந்தியா முழுவதும் இதுவரை ரூ.1253 கோடி மதிப்பிலான நகைகள், பொருட்கள், மற்றும் ரொக்கப்பணம் பிடிபட்டுள்ளன. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி … Read more