நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம்- மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக  வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதில், நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம் என்று மாநில தலைமை செயலாளர்,டிஜிபி-க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் கவனம் செலுத்த … Read more

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதமாகும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.நாளை வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,   மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை, மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

வெளியான அதிர்ச்சி தகவல் ! காணாமல் போன 20 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.வாக்கு என்னும் நாளும் நெருங்கி வருகிறது.கடந்த சில நாட்களாகவே தேர்தல் ஆணையம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மீது ஒரு சர்ச்சை ஓன்று எழுந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் தகவல் ஒன்றை பெற்றுள்ளார்.அதில்,இந்திய தேர்தல் ஆணையம் வாங்கிய  வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) 20 லட்சம் இயந்திரங்கள் காணாமல் போன அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.இதனால் மனோரஞ்சன் … Read more

தேர்தல் ஆணையத்தில் பிளவா ? சுனில் அரோரா விளக்கம்

தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பான ஒன்றுதான் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதினார்.அதில்,பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில்  அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை  என்று தெரிவித்தார். இது தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகளிடையே பிளவு ஏற்பட்டது போல … Read more

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள்

4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.   தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பொது விடுமுறை … Read more

இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது 2-ஆம் கட்ட தேர்தல்! 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று  வாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று  ( ஏப்ரல் 18ஆம் தேதி) மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.அதேபோல்   பரப்புரையும் முடிவு பெற்றது. இந்நிலையில் இன்று  தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 19 … Read more

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து தொடர்பான வழக்கு : தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பினை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். நாளை தமிழகத்தில் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது.சமீபத்தில் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று  குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் வேலூர் … Read more

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து என்று  தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான … Read more

தமிழகத்தில் மட்டும் ரூ.472.67 கோடி பறிமுதல்

இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.2426.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தற்போது தமிழகத்தை பொருத்தவரை  ஏப்ரல் … Read more

இந்தியா முழுவதும் பறக்கும் படையால் ரூ.1908.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.1908.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் … Read more