தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கட்டும் – ஓபிஎஸ், இபிஎஸ் தீபாவளி வாழ்த்து!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் வாழ்த்து தெரிவித்த ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளனர். ஓபிஎஸ் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், தீப ஒளித்திருநாளில் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இன்று பெருகும் இன்பம் … Read more

தமிழக மாணவிக்கு சுவீடன் விருது.. முதல்வர் வாழ்த்து.!

திருவண்ணாமலையை சேர்ந்த அனிஷா உமாசங்கர் என்ற மாணவி  சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இளம் கண்டுபிடிப்பாளர் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதில், பட்டயம், பதக்கம் மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த தொகை தன்னுடைய வருங்கால கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படும் என வினிஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து … Read more

“நான் ஒரு விவசாயி”, தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் – முதல்வர் பழனிசாமி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேட்டியளித்த முதல்வர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் 844 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இதனையடுத்து , செய்தியாளர்களை சந்தித்து … Read more

மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்திய கொலைகள் – மு.க.ஸ்டாலின்

மத்திய – மாநில அரசுகளே மாணவர்களை கொலை செய்திருக்கின்றன என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் உயிரைக் கூட சாக விடமாட்டோம் என்றார்கள் .கொரோனாவினால் 8 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள் லட்சம் பேருக்கு பாதிப்பு – அதிலும் பொய்க்கணக்கு. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா.? அரியலூர் அனிதா, பிரதீபா, மோனிஷா, ரிது ஸ்ரீ வைஷியா, கீர்த்தனா, சுபஸ்ரீ, விக்னேஷ் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் யார் … Read more

இராமசாமி படையாச்சியார் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு  தமிழக முதல்வர் ட்வீட்.!

இராமசாமி படையாச்சியார் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு  தமிழக முதல்வர் ட்வீட் செய்துள்ளார். காமராஜர் ஆட்சியில் 1954-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய சுதந்திர போராட்ட வீரர், சமூக நீதிக்காக பாடுபட்டவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் அவர்களது 103-வது பிறந்தநாளில் அவரது சேவையை … Read more

எம்.ஜி.ஆர். சகோதரர் மகன் கொரோனாவால் உயிரிழப்பு..முதலவர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்.!

எம்.ஜி.ஆர் சகோதரர் சக்ரபாணியின் மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு  தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். சகோதரர் சக்கரபாணியின் மகன் சந்திரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் சக்கரபாணியின் மகன் மறைவு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் சகோதரர் … Read more

நாளை முதல் 6 நாட்களுக்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு.!

நாளை முதல் 6 நாட்களுக்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு. விழுப்புரம் மாவட்டம் பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிபட்டுவந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து, முதல்வர் பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்துள்ளன. இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சுத்தனூர் … Read more

#BREAKING : எடப்பாடியார் என்றும் முதல்வர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்

எடப்பாடியார் என்றும் முதல்வர் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளகர்ளை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் … Read more

கோதையாறு அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு அணையில் 75 கன அடி  குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, இராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்தனர் . இந்த நிலையில் மேலும் மக்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணையி லிருந்து வருகின்ற 15.7.2020 … Read more

முன்னால் எம்.எல்.ஏ சுந்தரராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தரராஜன். இவர் தேமுதிக சார்பில் 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுந்தரராஜன் இன்று காலமானார். தற்போது இதற்கு தமிழக முதல்வர் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், திரு.R.சுந்தர்ராஜன் காலமான செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். … Read more