Tsunami Warning : சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.  இன்று காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூரில் 3வது முறையாக நில அதிர்வு – மக்கள் அச்சம்!

வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23ல் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் … Read more

மேகலயாவில் நிலநடுக்கம்.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் நடுக்கம்

மேகலயாவில் திடீரென்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை  1.13 மணியளவில்  திடீரென்று  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய புவியியல் மையம் இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டராக பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல் மற்றும் மணிப்பூரில் நிலநடுக்கம்… தேசிய நிலநடுக்க மையம் தகவல்…

இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் இன்று சரியாக அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோளில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. இதேபோல, மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோளில் 3.4 ஆக பதிவாகி உள்ளது எ.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கன், பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்…. தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்…

நம் அண்டை நாடுகளான ஆப்கன், பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம். நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 237 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இந்த அளவு  ரிக்டர் அளவுகோலில்  4.2 ஆக பதிவாகி உள்ளது. இதேபோல்  பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. … Read more

டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம்.! பொதுமக்கள் பதற்றம்.!

டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், இன்று இரவு 9.20 மணிக்கு தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பதற்றத்தில் … Read more

நில நடுக்கத்துக்கு மத்தியிலும் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர்!

பேட்டியின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர்.  உலகம் முழுவதும் கொரோனாவின்துக்கம் தாக்கம் நாளுக்கு நாள் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாடுகளில் லட்சத்தை கடந்து பாதிப்புகள் சென்று கொண்டிருக்கிறது.  இந்நிலையில், நியூசிலாந்தில் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அறிவாகவும், துணிவாகவும் விரைந்து செயல்பட்ட நியூசிலாந்து பிரதமராகிய பெண்மணி ஜெசிந்தாவால் அந்நாட்டில் கொரோனா தற்பொழுது கட்டுக்குள் உள்ளது. இதனால் … Read more

நிலநடுக்கத்திலும் நேரலையை தொடர்ந்த நியூஸிலாந்து பிரதமர்..!

நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் போதும், ஒரு தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் பேட்டி கொடுத்து வந்தார். நியூஸிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா, நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கி வந்தார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த வளாகமே லேசாக குலுங்கியது. இந்நிலையில், பிரதமர் அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரிடம், “இங்கு என்ன … Read more

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி !

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர்.  இந்தோனேசியாவில் பாண்டா கடற்பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 117 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டதாக கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருப்பதாக இ.எம்.எஸ்.சி கூறியுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்து மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். அருகில் உள்ள கிசார் தீவிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மூலம் சுனாமி வர … Read more

டெல்லியில் 2-வது நாளாக இன்றும் நில அதிர்வு .!

டெல்லியில் நேற்று மாலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.  இந்த நடுக்கம் வடகிழக்கு டெல்லியை மையம் கொண்டிருந்தது.இதனால் மக்கள் பயந்து வெளியே ஓடி வந்தனர். டெல்லி அருகே நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகிய நகரங்களிலும் நேற்று நில நடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2-வது நாளாக  டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக … Read more