வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் கசிவை சசரிசெய்யும் பணியை தொடங்கியது!

வல்லுநர் குழு  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபடவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை ரசாயனக் கசிவைக் கண்டறிவதற்காக சார் ஆட்சியர் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது நேற்று மாலை சுமார் அரை மணிநேரம் ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் … Read more

ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்வு!

 ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5அடி உயர்ந்து 45அடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் இருந்து காவிரியாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு ஆயிரத்து நூறு கனஅடியாகக் குறைந்துள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 2வாரங்களாக மழை பெய்ததில் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணையில் 81அடிக்குத் தண்ணீர் நிறைந்துள்ளது. 124அடி கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் நூறடிக்கு மேல் தண்ணீர் பெருகியுள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தபோது அதிலிருந்து நொடிக்கு 35ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. … Read more

தமிழகத்தை ஆட்டி படைக்கும் கொள்ளை சம்பவங்கள்!

 1,106 கொள்ளை, 815 செயின் பறிப்பு, 750 செல்போன் பறிப்புகள்  சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, தற்போது ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னையில் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்கள், பைக்கில் கணவருடன் செல்பவர்கள், சாலையோரமாக பேசிக்கொண்டே நடந்து செல்வோர் என பெண்களிடம் தொடர்ந்து நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. கத்திமுனையில் கடத்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடக்கத் … Read more

ஜிஎஸ்டி ரூ.20 லட்சம் வரை செலுத்த தேவையில்லை என்பதால் உணவு பொருள் விற்போரின் உரிம கட்டணம் மாறுகிறது!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)  ரூ.20 லட்சம் வரை செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விற்போரின் பதிவு சான்று அல்லது உரிமக் கட்டணத்தில் மாற்றம் வருகிறது. உணவுப் பொருட்கள் விற்கும் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வணிகர்கள் வரை பதிவுச் சான்று அல்லது உரிமம் வைத்திருப்பதை உணவுப் பாதுகாப்புத் துறை உறுதி செய்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் அதற்கு ரூ.100 செலுத்தி பதிவுச் … Read more

பிக்பாஸ் வீட்டில் இருந்து கமல்ஹாசனையே வெளியேற்றிய பிக்பாஸ்!

கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டை சுற்றிக் காண்பித்த பின், கன்பெஷன் ரூமுக்கு சென்ற நிலையில் பிக்பாஸ் வெளியேற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஓவியா, ஜூலி, நமீதா, காயத்ரி, சினேகன், ஆரவ், சக்தி, ரைசா, கணேஷ், வையாபுரி, பரணி, கஞ்சா கருப்பு எனப் பலர் கலந்து கொண்டனர். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில், தினம் தினம் பிக்பாஸ் சொல்லும் கட்டளைகளுக்கு ஏற்ப வேலை செய்வதும், பங்கேற்பாளர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுவதாகவும் இருக்கும். பங்கேற்பாளர்களுக்கிடையேயான உரையாடலில் நகைச்சுவை, … Read more

விருதுநகர் அருகே பற்றி எரியும் காட்டுத்தீயால் அரிய வகை மூலிகைகள் சேதம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே  பற்றி எரியும் காட்டுத் தீயினால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமடைந்துள்ளன. கம்பத்துமேடு மற்றும் பூலாமலை எஸ்டேட் பகுதி மலையின் உச்சியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீ சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. தகவல் அறிந்து சென்ற 25க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் தீ தடுப்பு காவலர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீ … Read more

திண்டுக்கல் அருகே 5 கார்கள், 2 சரக்கு வாகனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

சாலையில் சென்ற 5 கார்கள் மற்றும் இரண்டு சரக்கு வாகனங்களை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தாக்கி கண்ணாடிகளை உடைத்த நபர்களை காவல்துறையினர் தீவிமாக தேடி வருகின்றனர். பழனி சண்முகபுரம் சாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், அவ்வழியே வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, வாகன கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜயின் போஸ்டர்! இனி இது அந்த நாடு…

ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வேகம் எடுத்துள்ளன. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கு அடுத்த தலை முறை நடிகர்களான அஜித், விஜய் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் அஜித், விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். வருகிற 22-ந்தேதி விஜய் … Read more

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசித்திரமானது!முக. ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நாட்டிற்கு விசித்திரமானது என விமர்சித்தார். காஞ்சிபுரத்தில் மறைந்த திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்மொழியின் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நீதித்துறையை அவமானப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சென்னையில் கோடை விடுமுறைக்குப் பின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு!

இன்று கோடை விடுமுறைக்குப் பின் சென்னையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை கூறியுள்ளனர். அதன்படி பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள போலீசார், கலாட்டா மற்றும் அடிதடிகளில் ஈடுபட்டால் வழக்குகளில் சிக்கி … Read more