தென்னாப்பிரிக்காவில் அணை இடிந்து 3 பேர் பலி!!

தென்னாப்பிரிக்காவில் அணை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் காயம். தென்னாப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அணை ஒன்று இடிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை(செப் 11) காலை அணை உடைந்து 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சேதம் மற்றும் பாதிப்பை மதிப்பிடுவதற்கு பேரிடர் மேலாண்மைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சுரங்கத்தின் உரிமையாளர் உயிரிழப்புகள் மற்றும் வெள்ளத்தால் … Read more

முல்லை பெரியாறு அணை விவகாரம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி, அணைகள் என்னென்ன அதிகாரங்களுடன் செயல்படும் என எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read more

மேகதாதுவில் அணை காட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் – பிரேமலதா விஜயகாந்த்!

மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது என பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.  மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை கைவிடக்கோரி ஓசூரில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டிராக்டரில் பிரேமலதா ஊர்வலமாக வந்து, அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளார். பின் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் எனவும், தஞ்சைக்கு நீர் வரவில்லை … Read more

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம் ..!

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். கர்நாடகத்தில் உருவாகும் காவிரி ஆறு அங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த காவிரி ஆற்றின் நீரை சேமித்து வைக்கும் பொருட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண சாகர் அணையும், தமிழகத்தில் மேட்டூர் ஆணை, கல்லணை, மேலணை ஆகியவை உள்ளன. இந்த இரு மாநிலங்களும் இந்த நீரை பகிர்ந்து வருவதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையை … Read more

12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட வைகை அணை..!

வைகை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மிக பெரிய வெற்றி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து வரும் தண்ணீரால் சுற்று வட்டாரப்பகுதிகளில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. மேலும் இதில் 67.5 அடி … Read more

அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளில், ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் நகரங்களை விட கிராமப்புறங்களே அதிகளவில் உள்ளது. அதில் பெரும்பாலானோர், விவசாயத்தை நம்பி வருகின்றனர். அவர்களுக்கு நீர் ஆதாரங்களாக அங்குள்ள அணைகளை நம்பி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. தற்பொழுது இந்த … Read more

20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம். கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வந்ததால் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. மேட்டூர் அணையில் வினாடிக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 20,298 கன அடியிலிருந்து 15,124 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.42 அடியாகவும், … Read more

100 அடியை தாண்டிய அணை நீர்மட்டம்.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர்  மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது ஈரோடு பவானிசாகர் அணை. நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாயாறு மற்றும் பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி கொண்டே வருகிறது நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 … Read more

வேகமாக நிரம்பும் அமராவதி அணை..!

அமராவதி அணையில் நீர் 44 அடியாக தற்பொழுது அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 4,047 மில்லியன் கன அடி நீர் சேகரித்து வைத்து கொள்ள முடியும் மேலும் இதன் மூலம், கரூர், ஈரோடு மற்றும் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 57 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால் அணை நீர்மட்டம் விரைவாக … Read more

மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி  மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீரும் காரமடைபள்ளம் ,கொடநாடு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நீரும் வந்து சேர்வதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக … Read more