#Justnow : சீனாவில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.  சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சேலத்தில் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது … Read more

கொரோனா.. தேவையற்ற அச்சம் வேண்டாம் – முதலமைச்சர்

தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும் என்று சென்னை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரை. புதிய வகை கொரோனா குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பல்வேறு உத்தரவு மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக … Read more

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா? – மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை. சீனாவை மீண்டும் மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவல், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி … Read more

#JustNow: கொரோனா பரவல் – இந்த மாவட்டத்தில் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது . இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் இருக்க வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் … Read more

தமிழக முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாட்டில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி … Read more

#BREAKING: தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உயர்வு. தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உள்ளது. இதுபோன்று இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 34,17,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், குறிப்பாக இன்று இறந்தும் எதும் பதிவாகவில்லை என்றும் … Read more

புதிய வகை ஓமைக்ரான் தொற்று – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல். கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 புதிய கொரோனா வகை கண்டறியப்பட்டது என தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, குணமாகிவிட்டதாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், … Read more

#BREAKING: அதிர்ச்சி.. தமிழகத்தில் புதிய வகை கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது குணமாகிவிட்டதாக கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை … Read more

#Breaking:சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை ஐஐடி வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்,கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக … Read more

சென்னை ஐஐடியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..!

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர். அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு … Read more