ராகுல்காந்தி நீதித்துறை குறித்து விமர்சித்தது பொறுப்பற்ற செயல் !

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் நீதித்துறை குறித்து ராகுல்காந்தி விமர்சித்தது பொறுப்பற்ற செயல் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் நீதிக்காக பொதுமக்களை நாடியதாக குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தமது தந்தை, தாயாரின் வழியில் காங்கிரஸ் தலைவராகியுள்ளதாகவும், தற்போது அவரது செயல்பாடுகளால் காங்கிரசின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

யாராலும் தமிழை அழித்துவிட முடியாது!

அமைச்சர் ஜெயக்குமார் உலகின் மூத்த மொழியான தமிழை யாராலும் அழித்துவிட முடியாது என  கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக தமிழை நசுக்கப் பார்ப்பதாக ராகுல்காந்தி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ் மொழியை யாராலும் அழித்துவிட முடியாது என்றும், உலகின் மூத்த மொழியான தமிழ், உலகம் உள்ளவரை தழைத்தோங்கும் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட 6 வார கால கெடுவுக்கு, இன்றும் 11 நாட்களே உள்ள … Read more

தி.மு.க. தலைவா் கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு சென்றதன் காரணம் என்ன?

அரசியலில் இருந்து ஒருவருடத்திற்கும் மேல் ஒதுங்கி இருக்கும் தி.மு.க. தலைவா் கருணாநிதி 3 மாதங்களுக்கு பின்னா் இன்று மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்தாா்.. இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான தி.மு.க. தலைவா் கருணாநிதி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார் .தொடா்ந்து மருத்துவ சிகிச்சைகளை வீட்டில் இருந்தபடியே பெற்று வரும் கருணாநிதி இன்று மீண்டும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தாா். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கருணாநிதிக்கு தொடா்ந்து பேச்சு பயிற்சி உள்ளிட்ட … Read more

கமலஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் இல்லை : கடம்பூர் ராஜு ஆவேசம்.!

தமிழக  பட்ஜெட் குறித்து விமர்சித்த கமலுக்கு ஒன்றும் தெரியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் ஒவ்வொரு நபருக்கும் ரூ.45,000 கடன் உள்ளது என கூறியதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, அவருக்கு ஒன்றும் என தெரிவித்துள்ளார். சிவகாசியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில்,’ ‘கமலஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் இல்லை, அவருக்கு எதுவும் தெரியாது, அதை பொருட்படுத்தத் தேவையில்லை” என்றார். நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜக மீது தெலுங்கு தேசம் … Read more

தமிழக மக்கள் மீது மாற்றுமொழி திணிக்கப்படுகிறது : ராகுல் காந்தி.!

காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய அளவிலான 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள் உட்பட 15000 மேற்பட்டோர்  இதில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் இன்றைய நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் ஆளும் பாஜக அரசினை மிக கடுமையாக விமர்சனம் செய்தார், … Read more

அனைத்து ரயில்களிலும் விரைவில் சிசிடிவி, வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல்அறிவிப்பு

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், விரைவில் அனைத்து ரயில்பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், வைஃபை வசதி செய்யப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களையும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகள் உள்ளதாகவும் ஆக்க அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரைவில் அனைத்து ரயில்பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து ரயில்களிலும் வைஃபை இணையத்தள வசதி … Read more

பாஜக ஆட்சியின் மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு.!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை கூட உருவாக்கவில்லை என்று  குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரசின் முழு அமர்வு மாநாடு டெல்லியில் இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 14 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் இன்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க.வின் மோசமான நிர்வாகம் காரணமாக ஜம்மு காஷ்மீரின் நிலை முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக குற்றம்சாட்டினார்.மேலும் … Read more

பாஜகவுக்கு மகாபாரதத்தை கற்றுக்கொடுத்த ராகுல் காந்தி.!

ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகள் கவுரவர்களைப் போல் அதிகாரத்திற்காக சண்டையிடுவதாகவும், காங்கிரஸ் கட்சி பாண்டவர்களைப் போல் உண்மைக்காக போராடுவதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர்க்கே மகாபாரதத்தை உவமையாக வைத்து ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84 வது மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் உரையாற்றிய கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் சரமாரியாக சாடினார். பாஜக என்பது ஓர் அமைப்பின் குரல் என்றும், காங்கிரஸ் என்பது மக்களின் குரல் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். குருட்சேத்திரப் போரில் … Read more

நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் முடக்கம்.!

நிரவ் மோடியின் வாங்கி மோசடி தொடர்பாக அவரது சொத்துக்களை முடக்கி வரும் அமலாக்க துறையினர், தற்போது சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள 134 ஏக்கர் நிலத்தையும் முடக்கியுள்ளனர்.மேலும் பல்வேறு சொத்துக்களை முடக்கப்போவதகவும் தகவல்கள் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமான பணபரிவர்தனையின் மூலம் ரூ.11ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி(47) மீது, கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர … Read more

எஸ்எஸ்எல்சி (SSLC) தேர்வுக்கு கருணை மதிப்பெண் : அமைச்சர் செங்கோட்டையன்

SSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை – செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்துக்கொண்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பாடத்திட்டம் குறித்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் அச்சபடத்தேவையில்லை என்றார். SSLC examination for the SSLC examination: … Read more