இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

பொதுமக்களின் நலன் கருதி இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வரவேற்றனர். இதன் பின்   வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.மேலும் ரூ.169.77 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர். இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,கொரோனா தொற்றை … Read more

தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி- அரசாணையை வெளியிட்ட முதல்வர்!

தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கும் அறிக்கையை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் முதல்வர் தெரிவித்ததாவது, “தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது … Read more

#BREAKING : தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்  ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் சுற்றுப்பயணம்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று முதல் தமிழக முதலமைச்சர்  பழனிசாமி மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்நிலையில்  கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் இன்று  முதல் … Read more

தேவாலயங்கள் மற்றும் மசூதிக்கான நிதி 5 கோடியாக அதிகரிப்பு – முதல்வர்!

தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கான சீரமைப்பு  நிதி இந்த ஆண்டு முதல் 5 கோடியாக அதிகரிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது சிறப்பாக பணிபுரிந்த பலருக்கு பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், தேவாலயங்கள் மற்றும் வசதிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பழுதுபார்ப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்கான நிதி உதவி இந்த ஆண்டு … Read more

யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் – முதல்வர் பழனிசாமி

யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால் தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றது.இதனிடையே இன்று கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்2021-ஆம் ஆண்டு  திமுகவை ஆறாவது முறையாக அரியணை ஏற்றுவோம் என்று தெரிவித்தார்.இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தமிழகத்தில்  2021- ஆம் ஆண்டு எந்த … Read more

எஸ்.வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது ? ஜோதிமணி முதலமைச்சருக்கு கேள்வி

எஸ் .வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது என்று  கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமணி. சமீபத்தில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என கூறி  வீடியோ ஒன்றை வெளியிட்டார். சேகரின் இந்த வீடீயோவிற்கு பதில் அளிக்கும் வகையில்  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு.!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் எனும் கிராமத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் கடந்த 1ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஊரணியில் … Read more

இதற்கு மேல் என்ன ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும்? – முதல்வரின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதுவரை ஸ்டாலின் எந்தஒரு ஆக்கபூர்வமான பரிந்துரையையும் கூறவில்லை என முதல்வர் கூறியமைக்கு மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது,செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், ‘ நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஏதேனும் கருத்துக்களை கூறியுள்ளாரா? … Read more

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்.! சிபிஐ விசாரணை.! முதல்வர் அறிவிப்பு.!

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும். – தமிழக முதல்வர் அறிவிப்பு சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து மதுரை … Read more