சியான் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ பட ஸ்பெஷல் வீடியோ.!

Thangalaan

Thangalaan: சியான் விக்ரம் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரமின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ‘தங்கலான்’ படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் புதுவிதமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதைப் படக்குழு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதில் சியான் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவதைக் காணலாம், மேலும் … Read more

மார்க்கெட் இப்போ வேற! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய சியான் விக்ரம்!

Vikram actor

Vikram  நடிகர் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படங்களை வெற்றிகளை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. READ MORE- என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்!  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் தனது 62-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த … Read more

சியான் பக்கம் வீசிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ காற்று.! பாராட்டு மழையில் நனையும் இயக்குனர்.!

manjummel boys - Chiyaan Vikram

Manjummel Boys: மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் மிகவும் பெரிதாக பேசப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குனரை நடிகர் சியான் விக்ரம் பாராட்டியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இரண்டாவது வரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய … Read more

விக்ரமுக்கு அந்த மாதிரி நடிக்கவே தெரியாது! பரபரப்பை கிளப்பிய ராஜகுமாரன்!

Rajakumaran about vikram

நடிகர் விக்ரம் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் சரி, எந்த மாதிரி கெட்டப் போட்டுகொண்டு நடிக்கவேண்டும் என்றாலும் சரி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் என்றே கூறலாம்.  இவருடைய நடிப்பை பற்றி சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு நடிப்பு இலக்கணமாகவும் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு க்ளோசப் ஷாட் வைத்தால் எப்படி நடிக்க வேண்டும் என்று கூட தெரியாது எனவும் … Read more

திரைக்கு வருமா துருவ நட்சத்திரம்? திக்கி தடுமாறும் கெளதம் மேனன்…என்ன செய்ய போகிறார்?

Dhruva Natchathiram Gautham Menon

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன் மற்றும் திவ்யா தர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2017 ஆண்டுக  எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு இறுதியாக படம் கடந்த நவம்பர் … Read more

பிளாப் கொடுத்த இயக்குனருடன் இணையும் விக்ரம்! கோப்ரா ஸ்டைலில் அடுத்த படம்!

chiyaan vikram

நடிகர் விக்ரம் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி கொண்டு வருகிறார். தற்போது அவர் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் சித்தா படத்தின் இயக்குனரான அருன் குமார் இயக்கத்தில் தன்னுடைய 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக விக்ரம் யாருடைய இயக்கத்தில் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், அவர் … Read more

இன்னொருமுறை பாருங்க… கோப்ரா பிடிக்கும்.! ரசிகர்களின் விமர்சனத்திற்கு இயக்குனர் பதிலடி,.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் … Read more

காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றோம்.! விக்ரம் தரப்பு தகவல்….

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் மிகவும் அருமையாக நடித்து பிரமிக்க வைப்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது மனிரத்தனம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகால சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருந்த நிலையில், திடீரென விக்ரமுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக  அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த செய்தியை சில தவறாக புரிந்துகொண்ட விக்ரமுக்கு மாரடைப்பு … Read more

இதுவரை பார்க்காத விக்ரம்.! 3டி தொழில்நுட்பத்தில் சியான் படம்.? சூப்பர் அப்டேட் இதோ..

தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடிய ஒரு நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைபோல் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்டகத்தி , மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை … Read more

ஒரு அப்டேட்காக ஒரு வருசமாக காத்திருக்கும் விக்ரம் ரசிகர்கள்.! கடைசியாக 6 மணி..

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்ததாக கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி நிறுத்தி எடுக்கப்பட்டது. அதன் பின் இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.தற்போது படத்தின் இறுதிக்கட்ட … Read more