சீனாவில் கொரோனா அதிகரிப்புக்கு இந்த 4 வகைகள் தான் காரணம் – இந்தியா

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு 4 வகைகள் தான் காரணம் என்று இந்தியாவின் கொரோனா குழு தலைவர் தகவல். சமீப நாட்களாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு நான்கு வகைகள் காரணமாகின்றன என்று மத்திய அரசின் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா கூறியுள்ளார். அதாவது, ஓமிக்ரான் மாறுபாட்டின் BF.7 திரிபு 15% பாதிப்புகளுக்கு காரணம் என்றும்  பெரும்பாலான பாதிப்புகள் (50%) … Read more

சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனை பிணவறைகள்! மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை.!

சீனாவின் மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றினால்  பிணவறைகள் நிரம்பி வருகின்றன என தகவல். சீனாவில் மீண்டும் பெருகிவரும் கொரோனா நோய்த் தொற்றினால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் உயிரிழப்புகள் அதிகரித்து பிணவறைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனையில், ரத்தம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழந்து வருவதாகவும், இன்னும் பெரிய … Read more

#Breaking : இந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.!

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில்  இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாய்வில் தொடங்கியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அந்ததந்த மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் இருந்து … Read more

கேமராவில் சிக்காத அதிசய உடை.! சீன மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.!

சீன மாணவர்கள் பாதுகாப்பு கேமராக்களிலிருந்து மனித உடலை மறைக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஆடையை உருவாக்குவதாக கூறியுள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பு கேமராக்களில் இருந்து மனித உடலை மறைக்கும் உடையை சீன மாணவர்கள் கண்டுபிடிக்க போவதாக கூறியுள்ளனர். “இன்விஸ் டிஃபென்ஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த உடையானது, பகல் நேரங்களில் கேமராவை குழப்புவதற்காக கோட் வடிவிலும், இரவு நேரங்களில் AI மானிட்டரை குழப்புவதற்காக ஒரு வகை வெப்ப நிலையை வெளிவிடுகிறது. இது பற்றி மாணவர்கள் கூறுகையில், “இந்த … Read more

இந்திய பெருங்கடலில் சீன உளவு கப்பல்.! இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பு ..!

இந்தியப் பெருங்கடலில் சுற்றி திரியும் சீன உளவு கப்பல் “யுவான் வாங் 5” கண்டுபிடிக்கப்பட்டது. யுவான் வாங் 5 எனும் சீன உளவு கப்பல் பல்வேறு ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு சாதனங்களுடன் பொருத்தப்பட்டு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலானது இந்தியாவின் வங்காள விரிகுடாவில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை ஏவுவதற்கான சோதனைக்கான திட்டத்திற்கு முன்னதாக இந்திய பெருங்கடலில் நுழைந்தது. இந்தக் கப்பல் கடைசியாக இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. … Read more

China Astronauts: பத்திரமாக பூமியில் தரை இறங்கிய சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் .!

6 மாதங்களுக்கு முன் விண்வெளிக்கு சென்ற சீன வீரர்கள் மூன்று பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். சீனா, டியான்காங் என்ற தனி விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி சென்சு-13 என்ற விண்கலம் மூலம் 3 சீன வீரர்களை விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுப்பியது. இந்த நிலையில், விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்று 6 மாதங்கள் முடிந்த நிலையில் அவர்கள் … Read more

சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க அமெரிக்கா தடை.!

சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா தடை. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதாகக் கூறி, சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், அமெரிக்காவில் விற்பதற்கும் அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இரண்டு நிறுவனங்களும், அமெரிக்க ஃபெடரல் (கம்யூனிகேஷன் கமிஷன்(FCC) தகவல் தொடர்பு ஆணையத்தால் அச்சுறுத்தல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமெரிக்க FCC ஆனது, சீனாவின் டஹுவா டெக்னாலஜி, வீடியோ கண்காணிப்பு … Read more

இந்தியா உட்பட 4 நாடுகள் இணைந்து ஜப்பானில் போர் பயிற்சி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர்.  இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து குவாட் எனும் அமைப்பை உருவாகின. இந்த குவாட் அமைப்பானது ஒன்றிணைந்து கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டன. ஜப்பான் கடற்படையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இதில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்கள், கடல்சார் ரோந்து விமானங்கள், … Read more

டைனோசரின் முட்டைகள் கண்டுபிப்பு.. வியப்பில் சீன ஆராய்ச்சியாளர்கள்!

டைனோசர்கள் என்பது டைனோசௌரியா என்ற கிளேட் வகை ஊர்வனவற்றின் பல்வேறு குழுவாகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியின் சரியான தோற்றம் மற்றும் அழிவு பற்றி தெளிவாக இன்னும் அறியப்பட்டவில்லை. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தடையங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தற்போது சீனாவில் பீரங்கி குண்டு வடிவில் டைனோசர்களின் 2 முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டைகள் குறித்து ஆராச்சியாளர்கள் … Read more

சர்ச்சையில் ஆசிய மேப்! குட்டையை குழப்பிய சீனா..

இந்தியாவின் எல்லைப்பகுதிகளான காஷ்மீர் பாக்கிஸ்தானுக்குள்ளும், அருணாச்சல பிரதேசம் சீனாக்குள்ளும் இருப்பது போன்ற புதிய ஆசிய மேப் ஒன்றை சீனா அரசு தொலைக்காட்சி வெளியிட்டு சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியாவின் எல்லைப்பகுதியான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் சீனா அத்துமீறி நுழைந்து பல எல்லை கட்டிடங்களையும் பலன்களையும் காட்டியுள்ளது. தற்போது சீனாக்குள் அருணாச்சல பிரதேசம் இருப்பது போல் உள்ள மேப் ஒன்றை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் கோபுரங்களை … Read more