சீனாவில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவில் ஜியாங்சுவில் இருக்கும் சுஹாவ் நகரில் உள்ள விடுதி இடிந்து விழுந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால் விடுதியில் இருந்தவர்கள் 23 பேர் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் இந்த இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் பலத்த காயத்தால் மருத்துவமனையில் … Read more

அரசியலில் சேர ஆர்வம் காட்டும் ஜாக்கி சான் …..!

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வம் உள்ளதாக நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமாகிய ஜாக்கி சான் கூறியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமாகியவர் தான் ஜாக்கி சான். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். தனது 8 வயது முதலே நடிக்கத் தொடங்கிய இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். சீன பிரபலம் ஜாக்கி சானுக்கு உலகம் முழுதுமுள்ள பல கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு … Read more

சீனாவில் வானிலை ஆராய வெற்றிகரமாக செலுத்தப்பட்ட புதிய செயற்கைகோள்..!

சீனாவில் வானிலை மற்றும் கடல் வெப்பநிலை பற்றி ஆராய புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இன்று காலை சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள ஜுகுவான் விண்வெளி ஆய்வுகூடத்திலிருந்து வானிலை அறிவதற்காக செயற்கைகோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. எட்டு ஆண்டு ஆயுட்காலம் உடைய இந்த செயற்கைக்கோள் 11 செயற்கை உணர்திறன் கருவிகள் உடைய எப்.ஒய். -3இ செயற்கைக்கோள். இந்த வானிலை ஆய்வு செயற்கைக்கோள் மூலமாக சீனாவில் சுற்றுசூழல், ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றை மிக துல்லியமாக அறிந்துகொள்ளமுடியும். மேலும், … Read more

3-17 வயதினருக்கு சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி பாதுகாப்பானது..!

சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் நல்ல பலன் அளிக்கக்கூடியதாகவும் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லான்சன் தொற்று நோய் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனோவேக் தடுப்பூசியை 550 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 96% பலன் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.  மேலும், இது குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை முதல் … Read more

20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் தாக்குதல்-ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்துள்ளதாக அரிசோனா பல்கலைக்கழக உயிரியல் அறிஞர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளில் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல வகையாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணத்தால் உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸிலிருந்து … Read more

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…! 460 விமான சேவைகள் ரத்து…!

சீனாவில் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 460 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீப நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் திடீரென்று கொரோனா பெற்று பரவ தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று ஆறு … Read more

சீனாவில் 28 மணிநேரத்தில் கட்டிமுடித்த 10 மாடிக்கட்டிடம்..!

சீனாவில் 10 மாடிக்கட்டிடத்தை 28 மணி நேரத்தில் கட்டிமுடித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஷாங்கா நகரில் 28 மணி நேரத்தில் 10 மாடிக்கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர் பிராட் குரூப் நிறுவனம். இந்நிறுவனம் இந்த கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன்னதாக கதவுகள், ஜன்னல்கள், அலமாரிகள், சமையல் அறை, சுவர்கள் என அனைத்தையும் தயார் செய்து வைத்துள்ளனர். பின்னர் கட்டுமானம் தொடங்கியவுடன் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், அலமாரிகள் என ஒன்றாக சேர்த்து வைத்து நட்டு போல்ட்டுகளை பயன்படுத்தி இறுக்கி … Read more

சீனாவில் எரிவாயு பைப் வெடித்து 12 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் எரிவாயு பைப் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  சீனா ஹூபேய் மாகாணத்தில் அமைந்துள்ள ஷியான் நகரில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு பைப் ஒன்று வெடித்து சிதறிய சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவுப்பொருள் மார்க்கெட் பகுதியின் ஒரு பாகம் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்யும் கடைக்காரர்கள் மற்றும் உணவுப்பொருள் வாங்க வந்த பொது மக்கள் என பலரும் இடி பாடுகளில் சிக்கினர். மேலும், இதன் … Read more

வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா…! ஆய்வில் வெளியான தகவல்…!

வௌவால்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 24 வகையான கொரோன வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் பெருந்தொற்றுக்கு காரணமான SARS-COV-2வகையை ஓத்திருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் யுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. முதலில் அங்கு கண்டறியப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் பாதிப்பு பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் வௌவால் இனத்தில் புதுவகையான வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். … Read more

சீனாவில் ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு வெளியேற்றம்…8 பேர் உயிரிழப்பு….

சீனாவில் உள்ள ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயுவை சுவாசித்ததில் 8 பேர் இறந்தனர், 3 பேர் நோய்வாய்ப்பட்டனர். தென் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் நேற்று ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு கசிந்ததையடுத்து, அதை சுவாசித்தவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாகாண தலைநகர் குயாங்கில் உள்ள காவல்துறையினருக்கு அதிகாலையில் ஒரு ரசாயன நிறுவனத்தின் அருகே சிலர் மயக்கத்தில் கிடந்ததாக தகவல் கிடைத்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து … Read more