தமிழ்நாட்டில் “அடிடாஸ்” நிறுவனம்… இந்தியாவில் இதுவே முதல்முறை!

Adidas

உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பின் பிரபல நிறுவனமான “அடிடாஸ்” நிறுவனம், சீனாவுக்கு பிறகு இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் … Read more

மிக்ஜாம் புயல் நிவாரணம்: வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!

Cyclone Michaung

மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்தது. அதில் குறிப்பாக ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தலா 6000 ரூபாய் பெரும்பாலும் … Read more

நாடாளுமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாள்கள் சென்னையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. இங்கு தேர்தல் ஆணையர் தலைமையில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.  எந்த கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்கு சாவடி மையங்கள், பாதுகாப்பு தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெறுகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு… ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டம்!

Global investors summit

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் வளர்ச்சிக்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7, 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக, குறு, சிறு தொழில்துறை சார்பில் மாவட்டந்தோறும் … Read more

சென்னையில் பாய்லர் வெடித்த பயங்கர விபத்தில் ஒருவர் பலி.!

IOC -Chennai

சென்னை தண்டையார்பேட்டை உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOC) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாயிலர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பிற்பகல் 12 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாயிலர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் அலறியடித்து ஓடினர். அப்போது, பாயிலர் அருகே பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களான பெருமாள் மற்றும் 2 பேர் விபத்தில் சிக்கினர். பாயிலர்  வெடித்ததை தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அலறி … Read more

சென்னை : இளம்பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் காதலன்.! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

Chennai IT Employee Died

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம், நாவலூர் பகுதியில் பொன்மார் வேதகிரி நகரில் ஒரு இடத்தில் ஒரு இளம்பெண் உடலில் தீயிட்டு எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் பலி.! அந்த இளம்பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் … Read more

கிறிஸ்துமஸ் அன்று இதனை செய்தால் கைது – காவல்துறை எச்சரிக்கை!

tn police fine

கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டப்படுகிறது.  இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். அதன்படி, கிறிஸ்துவ தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், கன்னியாகுமரி … Read more

ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம்.!

RAIN

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு … Read more

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.39 குறைவு..!

gas cylinder

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாகும் போது ​​ சிலிண்டர் விலையும் அதிகரிக்கும் அவை குறையும்போது சிலிண்டர் விலையும் குறையும். ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில் பெரும்பாலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். இந்நிலையில், திடீரென இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன் படி சென்னையில் வணிக … Read more

பிறந்தநாள் சிறப்பு: 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய ரஜினிகாந்த்!

Chennai Flood Relief -Rajini

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், நிலமை மெது மெதுவாக சீராகி வருகிறது. இந்த சூழலில் டிவி பிரபலங்கள் நிவாரணம் தேங்கி நிற்கும் தணண்ணீரையும் பொருட்படுத்தாமல் களமிறங்கி உதவினர். சிலர் பணமாகவும், பலர் பொருளாகவும் மற்றும் உணவாகவும் கொடுத்து மக்களுக்கு … Read more