ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இன்று தேர்தல்..!

madras high court

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சங்கத்திற்கு  கடைசியாக கடந்த ஆண்டு 2016 -ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்னர், … Read more

கோடநாடு கொலை வழக்கு! இபிஎஸ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டாம்.. ஐகோர்ட் உத்தரவு!

Edappadi K. Palaniswami

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் சாட்சியம் அளிக்க இயலாததால் வீட்டில் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரியும் … Read more

தலா 1 கோடி ரூபாய் வேண்டும்.! திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு.!

Mansoor Ali khan -Trisha - Khushubu

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அண்மையில் ஒரு பேட்டியில் லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். இதற்கு திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவானது. நடிகை த்ரிஷா இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட … Read more

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. எடப்பாடி பழனிசாமி கூறிய காரணத்தை ஏற்க மறுத்த ஐகோர்ட்!

edappadi palaniswami

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடநாடு வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இபிஎஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சாட்சியம் அளிக்க … Read more

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

vk sasikala

அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, விகே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பிறகு, அதிமுகவில் ஒன்றை தலைமை பிரச்சனை பூகம்பமாக வெடித்து ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக … Read more

அதிமுக பெயரை பயன்படுத்த மாட்டோம் .. ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம்!

o panneerselvam

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. இதன்பின், கடந்த ஆண்டு ஜூலை மாத பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு உள்கட்சி தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். இபிஎஸ் இடைக்கால பொதுசெயலாளராக அறிவிக்கப்படும் சமயத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று … Read more

காமராஜ் மீதான முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

KAMARAJ

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவுத் துறை அமைச்சராக இருந்த போது, பொருட்கள் கொள்முதலில், ரூ.350 கோடிக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த புகழேந்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்டத்தில் … Read more

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது முகாந்திரம் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை.. லஞ்ச ஒழிப்புத்துறை!

kamaraj

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்ட ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்திருந்தார். பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு … Read more

கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை.! தமிழக அரசு விளக்கம்.!

டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது கலப்புமணம் முன்னுரிமை வழக்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கலப்பு மணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அழிப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் தொடுத்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் குரூப் டி தேர்வில் நிரப்பட்பட்ட 7382  பணியிடங்களில் அரசு தெரிவித்த கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு … Read more

#Breaking : காலை – மாலை குப்பை லாரிகளை இயக்க தடை.! உயர்நீதிமன்றத்தில் மனு.!

பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை மற்றும் மாலையில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  காலை பள்ளி அலுவலக நேரத்திலும், மாலையில் அதே போல நேரத்திலும் சென்னையில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து ஆனந்த் என்பவர் அந்த மனுவை சென்னை உய்ரநீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதனால், பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை … Read more