இத்தாலி ஓபன் டென்னிஸ் : 10வது முறையாக ரஃபேல் நடால் சாம்பியன்..!!

இத்தாலி ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டம் வென்றார் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர்  ஜோகோவிச் மற்றும்  மூன்றாம் நிலை வீரரான ரஃபேல்நடாலும் மோதினர். இந்த இறுதி போட்டியில் 3 செட் நடைபெற்றது. இதில் முதல் செட்டை ரஃபேல் … Read more

முத்தரப்பு டி20 போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஆஸ்திரேலியா.! போராடி தோற்ற இந்தியா.!

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில், 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனே, 54 பந்துகளில் … Read more

ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி முடித்து விட்டார் இயக்குனர் சுசீந்திரன்!!

வெண்ணிலா கபடி குழு படம் மூலம்  தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இவர் உடனே அடுத்தடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இவரது இயக்கத்தில் ஜீவா, ஆதலால்  காதல் செய்வீர், பாண்டிய நாடு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் ஒரு படத்தின் வேலையை விரைவில் முடித்து விட்டு அது ரிலீஸாகும் கேப்பில் அடுத்தப்பட ஷூட்டிங் முக்கால்வாசியை முடித்து விடுவார். அதே தற்போது இவரது இயக்கத்தில் … Read more

கபடி, கிரிக்கெட்டை தொடர்ந்து கால்பந்தை கையிலெடுத்த சுசீந்திரன்! விஷால் வெளியிட்ட ‘சாம்பியன்’ போஸ்டர்!!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு புதிய படத்தை எடுத்து வருகிறார். முந்தைய படங்களில் கபடிக்கும், கிரிக்கெட்டும் முக்கியதுவம் கொடுத்து அதில் நடக்கும் அரசியல்களையும் தோலுறித்து காட்டியவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் எவ்வளவு ஆழமாக படமெடுப்பாரோ அதே போல வேகமாக படமெடுப்பதிலும் வல்லவர். ஒரு படம் ரிலீஸாகும் சமயத்தில் அடுத்தப்பட இறுதிகட்ட ஷூட்டிங்கை எட்டிவிடுவார். அதே போல தற்போது சாம்பியன் பட வேலை நடந்து … Read more

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்; இந்தியாவின் 53 வருட கனவை நனவாக்கிய லக்‌ஷயா சென் !!

ஆசிய ஜூனியர்  பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் 53 வருட கனவை நிவர்த்தி செய்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதன்ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில், இந்தியாவின் லக்‌ஷயா சென் தாய்லாந்தின் குன்லாவுத்விடிஸ்டிரானை எதிர்கொண்டார். இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய லக்‌ஷயா சென், முதல் செட்டை 21-19 என கைப்பற்றினார்.தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய லக்‌ஷயா சென், 21-18 என வென்றார். முடிவில், இந்தியாவின் லக்‌ஷயா சென் தாய்லாந்தின் குன்லாவுத் விடிஸ்டிரானை 21-19, 21-18 எனவெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் சுமார் 53 ஆண்டுக்கு பின் ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர்பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். முன்னதாக கடந்த 1965ல்இந்தியாவின் கவுதம் தகார் தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல பிரனாப் சோப்ரா, பிரஜ்கா சவாந்த் ஆகியோர் கடந்த 2009ல் வெண்கலப்பதக்கமும், 2011ல்சமீர் வெர்மா (வெள்ளிப்பதக்கம்), பி.வி. சிந்து (வெண்கலப்பதக்கம்), 2012ல் பி.வி.சிந்து (தங்கம்), சமீர்வெர்மா (வெண்கலப்பதக்கமும்) வென்றுள்ளனர்.

சென்னை அணி தனது முதல் வெற்றியில் பட்டியலில் முதலிடம் பிடித்தது!

இந்தியாவில் ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டி ஆரம்பித்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை உள்ளூர் மற்றும் வெளியூரில் மோத வேண்டும் இதில் முதல் நான்கு இடங்களை பெரும் அணி அடுத்த அரையிறுதிக்கு முன்னேறும். இதில் நேற்று இரவு சென்னை FC மற்றும் கவ்காத்தி அணிகளுக்கு சென்னை ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் இது 2-வது லீக் ஆட்டமாகும். சென்னை … Read more