#Breaking:தமிழை பயிற்று மொழியாக்க இயலாது – மத்திய அரசு தகவல்!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்கவும்,பயிற்று மொழியாக்கவும் கோரிய கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் தொடர்ந்த வழக்கில்,மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மதுரை … Read more

“ஊதியம் வழங்க பணமில்லை:மாகாத்மா காந்தி வேலை உறுதிதிட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

அடுத்த 45 நாட்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே தீர்ந்து விட்டதாகவும், இதுவரை பணியாற்றிய … Read more

ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு அறிவிப்பு. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 10ம் தேதியுடன் சக்திகாந்த தாஸின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு … Read more

ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ஆய்வு – மத்திய அரசு..!

புதியதாக கண்டறியப்பட்டுள்ள ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் பரவி வரும் ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ICMR ஆய்வை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருவரை 10 பேருக்கு ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மஹாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா மாதிரிகளை பரிசோதனை செய்யபோது … Read more

வருமான வரம்பை நிர்ணயிக்க அறிவியல் பூர்வமான ஆய்வு ஏதாவது செய்யப்பட்டதா? – உச்ச நீதிமன்றம்

உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. நகரம், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு எப்படி ஒரே மாதிரியான வருமான வரம்பை நிர்ணயிக்க முடியும்? என்றும் வருமான வரம்பை நிர்ணயிக்க அறிவியல் பூர்வமான ஆய்வு ஏதாவது செய்யப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பியது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற வேண்டும் என்கீறீர்கள். … Read more

67 ஆண்டுகளுக்கு பின் டாடா வசம் செல்லும் ஏர் இந்தியா?

டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்நிறுவனத்திடமே செல்கிறது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஜே.ஆர்.டி.டாடா தொடங்கிய டாடா ஏர்மெயில், டாடா ஏர் லைன்ஸாக மாறியபின் ஏர் இந்தியாவாக உருவாகியது. இந்தியாவின் முதல் விமான நிறுவனமான … Read more

அக்.1 முதல் புதிய கட்டணம் – ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்த மத்திய அரசு!

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கு ரூ.300 கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் கணக்கு உள்ள வங்கி கிளையில் டூப்ளிகேட் ரகசிய எண் (pin) பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டும். மெட்ரோ நகரங்களில், … Read more

புதிய மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி – அமைச்சர்

மருத்துவ படிப்பில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை எழும்பரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லுரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். அதன்படி, 1,650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை மருத்துவ கல்லுரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனே … Read more

#Breaking:ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் – மத்திய அரசு முடிவு..!

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3 ஆம் பாலினத்தவர்களான திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி,மத்திய சமூக நீதித்துறை ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. கல்வி,வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின்கீழ் திருநங்கைகள் பயனடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Centre has moved … Read more

பிராந்திய மொழிகளில் சுற்றுச்சூழல் அறிக்கை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பிராந்திய மொழிகளில் சுற்றுச்சூழல் அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, அனைத்து பிராந்திய மொழிகளிலும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசுதெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் விரிவாக கருத்து கேட்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. அனைத்து மாநில … Read more