வழக்கை இழுத்தடித்தால் அதிகபட்ச அபராதம் – ஐகோர்ட் எச்சரிக்கை

வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என நீதிபதி கருத்து. வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். … Read more

தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு!

எவ்வித காரணமும் இன்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது என ஆளுநர் பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றியும் திராவிட கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் பேசி வருகிறார். … Read more

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு!

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.  கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து 1996-ல் அவர் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டு சேலைகள், 750 ஜோடி காலணிகள், … Read more

#BREAKING: வீராங்கனை பிரியா உயிரிழப்பு – போலீஸ் வழக்குப்பதிவு

தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு. கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு … Read more

#BREAKING: குஜராத் பாலம் விபத்து – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

குஜராத் மோர்பி தொங்கும் பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.  குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் … Read more

மூதாட்டி மீது வழக்கு இல்லை – காவல்துறை

மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம்.  அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில்,  கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கெட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடு என்று … Read more

#Flash:பாமக நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்!

பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து. கடந்த 2012,2013-இல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடுகளில் காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி இரவு 10 மணிக்கு பிறகும் தொடர்ந்து கூட்டம் நடத்தியதாகவும்,மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,பாமக நிறுவனர் … Read more

சற்று முன்…பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்குப் பதிவு!

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசும் குறைக்க வேண்டும் எனவும்,இதனை 72 மணி நேரத்திற்குள் அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடப்படும்,போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக நேற்று பேரணி நடத்தப்பட்டது.அதன்படி,பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் சென்னை தலைமை செயலகத்தை … Read more

ஜெய் பீம் பட தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவிட நீதிமன்றம் உத்தரவு ..!

ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் பீம். இந்த திரைப்படம் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்ததாக பாமக வன்னியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து இந்த படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது. மேலும் இந்த … Read more

தற்கொலைக்கு தூண்டியதாக கர்நாடக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு..!

கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது … Read more