பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார். பின்னர் கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வராக தொடர்ந்து வந்தார். … Read more

ராஜினாமா செய்தார்.. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்..!

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் ( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் தற்போது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கொடுத்துள்ளார். இன்று காலை ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார், ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  ஆட்சியை கலைக்க கோரி ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலபேரிடம் இந்த ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை … Read more

ராஜினாமா செய்ய வாய்ப்பு.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதிஷ் குமார்..?

Nitish Kumar

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம்( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமாரும் மீண்டும் கட்சி மாறுவது குறித்து பீகாரில்  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடன் கூட்டணியை முறித்து கொண்டு இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தலாம் என்று இதைத் தொடர்ந்து அவர் ராஜ்பவனுக்குச் … Read more

I.N.D.I.A கூட்டணி… நிதிஷ் குமார் பிரதமராக வாய்ப்பு இருக்கிறது.! அகிலேஷ் யாதவ் கருத்து.!

Nitish kumar - Akhilesh Yadav

ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணிக்கு எதிராகவும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்  ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியினை முதலில் ஒன்றிணைத்து முதல் ஆலோசனை கூட்டமே பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதே போல அடுத்தடுத்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திலும் … Read more

மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா நிதிஷ்குமார்? வெளியான பரபரப்பு தகவல்!

nitish kumar

இந்தியா கூட்டணியில் உள்ள ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன்படி, 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. பீகாரில் … Read more

பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்

airplane stuck

பீகார் மாநிலம் மோதிஹாரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிப்ரகோதி மேம்பாலத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் சிக்கி கொண்டது. மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்திற்கு அடியில் விமானம் உடல்  சிக்கிக்கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. விமானத்தின் உடல் சிக்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து … Read more

மோசமடையும் காற்றின் தரம்… இந்தியாவின் டாப் 10 லிஸ்ட் இதோ…

TOP 10 Worst Air Quality Cities

தற்போது நாடு முழுவதும் வாகனங்களின் அதிகரிப்பு, இயற்கை வளங்களின் பரப்பளவு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் பல்வேறு நகரங்களில் மோசமடைந்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னையின் காற்றின் தரம்கூட நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் காற்றின் தரம் மோசமடைந்து உள்ள நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மோசமான நிலை, மிகவும் மோசமான நிலை என மாறி மாறி டெல்லியின் காற்றின் தரம் பதிவாகி உள்ளது. இன்று காலை 7.00 … Read more

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு… மன்னிப்பு கேட்ட பீகார் முதல்வர்.. !

நேற்று சட்டப் பேரவையில் பெண் கல்வி மற்றும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து பேசிய முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பீகார் முதல்வர் நேற்று சட்டசபையில் பேசிய அவரது பேச்சு விவாதப் பொருளாக எக்ஸ்(ட்விட்டர் ),  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மாறியுள்ளது. நேற்று சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். தற்போது பீகார் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. … Read more

பீகாரில் சாதிவாரி இடஒதுக்கீடு அதிகரிப்பு.! முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!

Bihar CM Nitish kumar

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, சில மாதங்களுக்கு முன்னர் ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்திருந்தது. இந்த கணக்கெடுப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து இருந்தாலும், இதன் மூலம் இடஒதுக்கீடு அளவீடு மாற்றியமைக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து இருந்தார். முதல்வர் நிதிஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய முழு விவரத்தை முழு அறிக்கையாக பீகார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்று வந்த போது மிக முக்கிய அறிவிப்பை முதல்வர் நிதிஷ்குமார் … Read more

வட மாநில தசரா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!

Durga Puja

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் துர்கா நவமி அன்று பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடைப்பெற்றது. நேற்று மாலை நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததுள்ளனர் என்றும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் தற்போது சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜா தள துர்கா பூஜை  ‘மகா நவமி’ கொண்டாட்டங்கள் மற்றும் களியாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். … Read more