தளபதி விஜயின் வெறித்தனம் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் இல்லத்தில் நாளுக்குநாள் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, புதிய புதிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், கவலையான தருணங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. எவ்வளவு தான் சண்டையிட்டுக் கொண்டாலும், விளையாட்டின் போது அனைவரும் ஒன்றிணைந்து விடுகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள், தினமும் காலையில் எழுந்தவுடன், ஒரு பாடலுக்கு அனைவரும் சேர்ந்து நடனமாடுவதுண்டு. அந்த வகையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி … Read more

பிகிலுடன் மோதுவதை தவிர்த்த தமன்னா! பெட்ரோமாக்ஸ் அப்டேட்!

இந்த வருட தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள பிகில் திரைப்படம் மற்றும் கார்த்தி நடிப்பில் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் தமன்னா நடித்துள்ள திகில் திரைப்படமான பெட்ரோமாக்ஸ் தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என  படக்குழு அறிவித்து இருந்தது.  ஆனால் தற்போது வந்த தகவலின் படி, இப்படம் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் முன்னர் அதாவது அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு … Read more

“பிகில்” விழா சர்ச்சை: நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு..!

சமீபத்தில் பிகில் திரைப்பட இசை வெளியிட்டு விழா தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்த விழாவில் விஜய் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்க்கு  கே.எஸ்  அழகிரி ஆதரவு தெரிவித்து உள்ளார். நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுகவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் புரிந்து கொண்டார் என கே.எஸ்  அழகிரி கூறியுள்ளார். மேலும் அழகிரி கூறுகையில் ,நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சி சாராதவர். லட்சக்கணக்கான இளைஞர்களால் … Read more

பிகில் இசையீட்டு விழாவில் தளபதியுடன் பூவையார்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், கடந்த சில  நாட்களுக்கு முன்பதாக, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கானா பாடல் பாடி பட்டையை கிளப்பி வரும் பூவையாரும் கலந்து கொண்டு பாடல் பாடினார். இதனையடுத்து, இவர் தளபதி … Read more

பிகில் இசைவெளியீட்டு விழாவிற்கு எந்த அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது?! கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.  இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி, நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பல கருத்துகளை தெரிவித்து இருந்தார். முக்கியமாக பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விஷயத்தில் யாரை தண்டிக்க வேண்டுமோ அவர்களை தண்டிக்க வில்லை எனவும்,  யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு அவர்களை  உட்கார … Read more

பிகில் படம் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதா? பிகில் போஸ்டரை கிழித்தெறிந்த வியாபாரிகள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், கோவை உக்கடம் புதிய மீன்மார்க்கெட் பகுதியை சேர்ந்த வியாபாரியான கோபால், பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் கையில் வைத்திருந்த பிகில் போஸ்டரை ஆக்ரோஷமாக … Read more

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்-விஜய் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்று விஜய் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,  யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார்.ஆனால் விஜயின் இந்த கருத்துக்கு ஆளும் … Read more

மக்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் அட்லீயின் மனைவி!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இதில், தளபதி விஜயின் பேச்சு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. இயக்குனர் அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அட்லீயுடன் இணைந்து … Read more

TRP போட்டி! பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்!

டிவி சேனல்கள் எப்போதும் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பல புதிய நிகழ்ச்சிகளை  ஒளிபரப்புவது, பிரபல நடிகர்களை வைத்து புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழகுவது என போட்டி போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் பிக் பாஸ் தொடங்கிய நாளில் இருந்து சன் டிவியில் ஞாயிறு கிழமைகளில்  டிஆர்பியை கைப்பற்ற புதிய திரைப்படங்களாக ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் இன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வியாழன் அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து … Read more

ஹாப்பி பர்த்டே அட்லீ சார்! பிகில் பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் வாழ்த்து!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடிகர் விஜயின், தெறி, மெர்சல் மற்றும் தற்போது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் அட்லீ இன்று தனது 33-வைத்து பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையடுத்து,பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more