பேனரால் இளம்பெண் பலி -அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ  மீது  பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ  பரிதாபமாக உயிரிழந்தார்.இவர் குரோம்பேட்டையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

சென்னையில் இளம்பெண்ணின் உயிரை பறித்த பேனர் கலாசாரம் !

சென்னையில் இளம்பெண் மீது பேனர் மேலே விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்ததால், தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். தமிழகத்தில் சாலை நடுவே பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைத்ததால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் மீது  பேனர் விழுந்ததில் நிலை … Read more

அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சகத்துக்கு சீல் -சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னையில் மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சக உரிமை ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   சென்னையில் விதிகளை மீறி பல இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், சென்னையில் மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சக உரிமை ரத்து செய்து சீல் வைக்கப்படும்.மேலும்  விளம்பர பதாகை அனுமதி எண் ,நாள்,அளவு ,அனுமதி கால அவகாசம் குறிப்பிட … Read more

சத்தியமா பேனரை நா கிழிக்கல சூடம் அடித்து சத்தியம் செய்த கிராம மக்கள் !

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அடுத்து உள்ள விளாங்குடி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக இரண்டு நாள்களுக்கு முன் நடை பெற்றது. இந்த விழாவிற்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் ,காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் கே .ஆர் ராமசாமி இருவரையும் கிராமத்தின் பொதுமக்கள் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைத்தனர். இருவரையும் சிறப்பாக வரவேற்கும் விதமாக ஐந்திற்கும் மேற்பட்ட பேனர்கள் வைத்து இருந்தார்கள்.குடமுழுக்கு விழாவிற்கு முன்தினம் இரவு அவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் … Read more

பேனர் விவகாரம் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ஸ்டாலின்

சாலையோரங்களில் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. திமுக சார்பில் தொடர்ந்த இந்த வழக்கின் மூலம் பேனர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.