மக்களவை தேர்தல்… விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்..!

rahul gandhi

congress : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, கடன் தள்ளுபடி, MSP சட்டம், பயிர்க் காப்பீடு என விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அள்ளி வீசியுள்ளார். இதற்கு முன்பு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே வாக்குறுதிகளை அளித்த நிலையில், இன்று விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. Read More – இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு! மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ நியாய … Read more

உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் – வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு அறிவுரை

உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி,  மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது.  பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோட்டின் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றை நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளர்கிறது. நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்குகிறது. மண்ணில் பயிர்களுக்கு வறட்சி மற்றும் களர் உவர் தன்மைகளை தாங்கி வளரும் திறனை கொடுக்கிறது. தழைச்சத்து … Read more

நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டுகோள்!

பயிர் சேதமடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்ட விவசாயிகள் நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று, மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், … Read more

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த வில்லேஜ் விஞ்ஞானி! விவசாயத்தை காக்க புதிய கண்டுபிடிப்பு!

நெல்லையில் விவசாயத்தை காக்க புதிய கருவியை உருவாக்கிய வில்லேஜ் விஞ்ஞானி! விவசாய நிலங்களை, காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக நெல்லையை சேர்ந்த தமிழழகன்(32) என்பவர் சோளக்கொல்லை பொம்மை வடிவில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். தமிழழகன் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாழ்ந்து வருகிறார். அந்த பகுதியில் அத்தியாவசிய வேலை என்றால் அது விவசாயம் தான். மேற்கு தொடர்ச்சி காட்டு பகுதியில் உள்ள விலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து நாசமாக்குவதை தடுப்பதற்காக இந்த கருவியை கண்டுபிடித்துள்ளதாக தமிழழகன் கூறுகிறார். மேலும் … Read more

#BREAKING: தோட்டக்கலை திட்டம் – பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு அழைப்பு. தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.27.50 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. கத்திரி, மிளகாய், தக்காளி, மஞ்சள், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள், நடவுகன்றுகளை 40% மானியத்தில் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விதைகள், நடவுகன்றுகளை மானிய விலையில் வழங்க ரூ.8.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, tnhorticulture.tn.gov.in … Read more

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்

பிரதமரின் விவசாயிகளுக்கான ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் பணம் பெற்று வரும் விவசாயிகள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வருகின்ற 15-ஆம் தேதிக்குள் http://pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை … Read more

ரூ.35 கோடியில் வேளாண் பசுமை பூங்கா – தமிழக அரசு திட்டம்!

கிண்டியில் 6.4 ஏக்கர் பரப்பளவில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேளாண்மைத்துறை பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டம். சென்னை கிண்டியில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேளாண்மைத்துறை பசுமை பூங்கா அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கிண்டியில் 6.4 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பசுமை பூங்கா அமைக்கும் பணியை மார்ச் மாதம் பணிகளை முடிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நறுமண தாவரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அமைக்கப்படவுள்ளன … Read more

இளைஞர்கள் விவசாயத்திற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும் – அசாம் முதல்வர்!

மாநிலத்திலுள்ள இளைஞர்கள் விவசாயத்திற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.  அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் விவசாயம் குறித்து தனது மாநிலத்தில் உள்ள மக்களுக்கு நேற்று தோல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அசாமின் விளைநிலங்கள் சட்ட விரோத ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் விவசாய வயல்களில் தங்களை அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு வேலை மற்றும் எளிதான வேலையில் நிற்காமல் … Read more

விவாதமின்றி ரத்து செய்யப்பட்ட விவசாய சட்டங்கள் – பிரதமர் மோடியை சாடிய பி.சிதம்பரம்!

விவாதமின்றி விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் பிரதமர் மோடியை சாடியுள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே இந்த விவசாய சட்டம் மூன்றும் விவாதங்களின்றி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யும் பொழுது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் … Read more

விவசாயிகளை பிற உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது;மீறினால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

தனியார் உரக்கடைகள் பிற உரங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் உரக்கடை உரிமையாளர்கள் யாரும் விவசாயிகள் கேட்காத உரங்களை வாங்க நிர்பந்திக்கக்கூடாது,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,இது தொடர்பாக வேளாண்மை-உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சம்பா (இராபி) பருவத்தில் 13.747 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி … Read more