ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி; 21 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் உள்ள பி.டி.13 பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் … Read more

ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே..!-கைலாஷ் சத்யார்த்தி..!

ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். வன்முறை அபாயத்தில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதில் பல ஆண்டுகள் பணியாற்றியதற்காக 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சத்யார்த்தியை, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை அன்று எஸ்டிஜி வழக்கறிஞராக நியமித்தார். இந்நிலையில் கைலாஷ் சத்யார்த்தி தற்போது தெரிவித்துள்ளதாவது, தலிபான் ஆட்சியின் கீழ் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் … Read more

போதிய உணவின்றி ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகள் தவிப்பு…!

ஆப்கானிஸ்தானில் போதிய உணவின்றி 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் போதிய அளவு உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது … Read more

ஆப்கானிஸ்தான் சூழல் அண்டை நாடுகளை பாதிக்கும் – பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு என பிரதமர் மோடி பேச்சு. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) (Shanghai Cooperation Organization) 21வது கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். நிச்சயமற்ற நிலை மற்றும் அடிப்படைவாதம் ஆப்கானிஸ்தானில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும் என்றும் அடிப்படைவாத … Read more

ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர்…! MEA தகவல்…!

ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் நாடே பதற்றமான நிலை தான் காணப்படுகிறது. அங்கு பெண்கள், முன்னாள் அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் அந்நாட்டைச் அல்லாதவர்கள் என பல தரப்பினருக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆப்கானில் வசித்து வரும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்து ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பன்சிரி லால் அரெண்டே என்பவர் மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். … Read more

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்கிறார்..!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்லவிருக்கிறார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் தொடர்பான முக்கிய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான சிஎஸ்டிஓ பற்றிய கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 16-17 இல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

“ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் 55% பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி” – கருத்துக்கணிப்பு..!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் 55% பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று காலுப்( Gallup) பாகிஸ்தான் நியூஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்த தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தினர். இதனையடுத்து,புதிய அரசின் அமைச்சரவை பட்டியலை தலிபான் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். … Read more

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம்..!-தலிபான்கள்

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி … Read more

இரட்டை கோபுர தாக்குதலால் நிறுத்தப்பட்ட தலிபான்களின் பதவியேற்பு விழா

ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா இன்று நடைபெறவிருந்த நிலையில் தலிபான்கள் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு பணப் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பணத்தை சேமிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.எனினும், 9/11 தாக்குதலின் 20 வது ஆண்டு இன்று கடைபிடிக்கப்படும் நிலையில்,அதன் நட்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் என்று ரஷியாவின் செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை அமைக்கும் விழாவில் கலந்து … Read more

ஆப்கானிஸ்தான் : சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபரின் சகோதரர்…!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் ரோகுல்லா சலே தாலிபான்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அப்பொழுது துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டார். மேலும், அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலிபான்களுக்கும் … Read more