BREAKING NEWS:எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா!

எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா ஈடுப்பட்டுள்ளனர். எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் … Read more

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கோரி பல்வேறு கட்சிகளின் கூட்டமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. சார்பில் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி பிரச்சனையில் தமிழக நலன் புறக்கணிக்கப்படுவதாகவும், நீட் தேர்வு திணிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ம.திமு.க. பொதுச் செயலாளர் வைகோ, பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த குற்றச்சாட்டில் ஜாமின் மறுக்கப்பட்ட … Read more

கமல்ஹாசன் கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கிய பெண்ண மீட்டு தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்!

கமல்ஹாசன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில்  விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.   கருங்கல் சந்திப்பு என்ற இடத்துக்கு காரில் சென்ற அவர், வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண் விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்ட கமல் அந்த பெண்ணை மீட்டு தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில் அவர் மக்களைச் சந்தித்தார். குளச்சல் வந்த கமலிடம், ஒக்கி புயலில் பல மீனவர்கள் காணாமல் போன … Read more

ஒரு புறம் காங்கிரஸ் போராட்டம்!மறுபுறம் பேரவைக்கு வந்தார் எடியூரப்பா !

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தும் நிலையில் பேரவைக்கு வந்தார் எடியூரப்பா பேரவையில் வாயிற்படியை தொட்டு வணங்கி உள்ளே சென்றார் எடியூரப்பா. சற்று முன்  கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா. கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா 3 வது முறையாக கர்நாடக முதலமைச்சராகியுள்ளார் எடியூரப்பா.ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் … Read more

கோவையில் குடிபோதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் கைது!

குடிபோதையில்  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தாறுமாறாக பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் a.b.t என்ற தனியார் பேருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்றது. பேருந்தை விஜய் என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து புறப்பட்டது முதலே தாறுமாறாக ஓட்டிய ஓட்டுனர் விஜயை பயணிகள் எச்சிரித்துள்ளனர். ஆனாலும் பேருந்தை விஜய் அஜாக்கிரதையாக இயக்கியுள்ளார். பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி திடல் அருகே வந்தபோது தாறுமாறாக ஓடிய … Read more

எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஒருதலைப்பட்சமானது திருமாவளவன் கண்டனம்..!

எடியூரப்பாவை கர்நாடக ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஒருதலைப்பட்சமானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

டிரைவர் போதையில் இருந்தால் பஸ் இயங்காது நவீன வசதிகளுடன் புதிய பேருந்துகள் அறிமுகம்..!

சென்னை தலைமைச் செயலகத்துக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தின் (கோவை) ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்து நேற்று கொண்டு வரப்பட்டிருந்தது. அவற்றின் கட்டுமானம் மற்றும் நவீன வசதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் உடனிருந்தனர். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி வருமாறு:- 2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி, புதிய கூண்டுகள் கட்டி தயாராக உள்ள முதல் சிற்றுந்து … Read more

தமிழக காங்கிரஸ் கமிட்டிகள் வெடித்தது மோதல் திருநாவுகரசர் குஷ்பு நேரடி சன்டை..!

  காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:- தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்வதில் தவறு கிடையாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எந்த கட்சியுடனும் ஆயுட்கால கூட்டணி வைக்க முடியாது. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ?. அதன்படி நாம் கூட்டணியை அமைக்கிறோம். தற்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி … Read more

ராகுல் காந்தி மதச்சார்பற்ற ஜனதாதளத்தை காவி கட்சி என கூறிய நிலையில், கர்நாடகாவில் தற்போது கூட்டணி அமைத்திருப்பது ஏன்? தமிழிசை

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,மதச்சார்பற்ற ஜனதாதளத்தை ராகுல் காந்தி காவி கட்சி என்று கூறி வந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பதாக  தெரிவித்துள்ளார். மேலும்  அவர்  கர்நாடகாவில் பா.ஜ.க எப்படி ஆட்சி அமைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்துடன் நல்லுறவு மேம்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தற்கொலை செய்த மாணவன் 12 ஆம் வகுப்பு தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 1024 ..!

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தற்கொலை செய்த மாணவன், 12 ஆம் வகுப்பு தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, தினேஷ் நல்லசிவன் என்ற மாணவர் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவும் டாஸ்மாக் கடைகளை மூடவும் வலியுறுத்தி கடிதம் எழுதிவைத்து, கடந்த 2 ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று வெளியான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில், மாணவர் தினேஷ் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.