3,000 சிசிடிவி கேமராக்கள் திருச்சி மாநகர் முழுவதும் பொருத்துவதற்கான பணிகள் தொடக்கம்!

3 ஆயிரம் சிசிடிவி காமிராக்களை திருச்சி மாநகர் முற்றிலும்  பொருத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது. இதுவரை இத் திட்டத்தின் படி  500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே நகரின் எந்த மூலையில் நடைபெறும் குற்றத்தையும் தடுப்பதற்கான நவீனக் கட்டமைப்பு வசதிகள்1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, அங்குள்ள பிரம்மாண்ட மின்னணு திரைகள் மூலம் குற்றவாளிகளின் நடமாட்டம் துல்லியமாக … Read more

கோவையில் உடற்பயிற்சி செய்வது போல் பல்பை திருடிச் செல்லும் திருடர்!

சமூக வலைத்தங்களில் கோவையில் உடற்பயிற்சி செய்வது போல் நடித்து ஒருவர் பல்ப் திருடும் சிசிடிவி காட்சி  வேகமாகப் பரவி வருகிறது. காண்போர் வாய் விட்டுச் சிரிக்கும் அளவுக்கு உள்ளது இவரது செய்கைகள். அடடா உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் இவருக்கு என்ன ஒரு அக்கறை… அதிகாலையில் எழுந்த உடனே இவ்வளவு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுகிறாரே?.. கட்டி தொங்க விடப்பட்டுள்ள பல்பை பிடித்து கூட தொங்குகிறாரே.. இவரது ஆர்வத்துக்கு அளவே இல்லையா? என்பது தான் இந்தக் காட்சிகளைப் பார்க்கும் … Read more

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனைச் செவிலியர் இருவர் விளக்கம்!

 நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவமனை மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா இருவரும் விளக்கம் அளித்தனர். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஜெயலலிதாவின் வீட்டில் பணியாற்றியவர்கள் எனப் பலருக்கும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆகிய இருவரும் இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இன்று ஆஜராக சம்மன் அனுப்பி விசாரணைக்கு வராதவர்களிடம் ஜூலை … Read more

எம் பாஸ்போர்ட் செயலியில் எப்படி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க வேண்டும்?இதோ விவரம்

செல்ஃபோன் மூலமே  பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள எம் பாஸ்போர்ட் சேவா செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல் முறை விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், மொபைல் ஆப் (Mobile App) மூலமாகவே, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, எளிதில் பெறும் வகையில் எம்.பாஸ்போர்ட் சேவா என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தார். அந்த செயலி மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என பல கட்டங்களாக விளக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக … Read more

மீனவ சங்க நிர்வாகிகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளை மீட்டு வர நடவடிக்கை!

மீனவ சங்க நிர்வாகிகள்  இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளை மீட்டு வருவதற்காக, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் இலங்கைக்குப் பயணமாகினர். கடந்த மூன்று ஆண்டுகளில், மீன்பிடிக்கச் சென்ற, 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அப்போது கைதான மீனவர்களை விடுவித்த இலங்கை அரசாங்கம், விசைப்படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில், 6 மாதங்களுக்கு முன்பு, 42 படகுகளை விடுவித்தது. இதில்,32 படகுகளை மட்டுமே மீட்க முடிந்தது. எஞ்சிய 10 படகுகளை மீட்க … Read more

தமிழக அரசு வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறியும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு ஒப்புதல்!

தமிழக அரசு ,மழைப் பொழிவின் அடிப்படையில் வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகால மீட்பு நடவடிக்கைகள் இதன் மூலம் முறைப்படுத்தப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பலவகை பேரிடர் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான வான் வழி … Read more

ஏபிவிபி அமைப்பினர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் மீது பாலியல் புகார், நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்!

பாஜக மாணவர் அணியினரை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் , போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய மாணவர் சங்க தலைவர் ஃபைரோஸ் கான் மீது, சத்தீஷ்கரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஃபைரோஸ் கான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சாலை … Read more

தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை!ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் புகார்

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. மேலும் கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் வழங்கி இருந்தது.   இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் … Read more

எனக்கு புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது!புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  அரசு பதவியில் உள்ள தமக்கு அதிக பொறுப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக புதுச்சேரியில் கிரண்பேடி உத்தரவுப்படி  117 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இரண்டரைக் கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி ஒரே நாளில் வசூலானது. இதையடுத்து தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சராசரி மனிதர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருதல், வளர்ச்சி, சட்டம் … Read more

நிர்மலாதேவி குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்!

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கில் சிபிசிஐடியின் கோரிக்கையை ஏற்று நிர்மலாதேவியின் குரல்மாதிரியைப் பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன்படி, நிர்மலாதேவியை இன்று காலை 10 மணி அளவில் மதுரை மத்தியச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர். சென்னையில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் நாளை நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை செய்யப்பட … Read more