இரட்டை இலை அதிமுகவுக்கே..! ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

Two Leaves Symbol: ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு.. இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு ஒதுக்கீடு இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதை நிராகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக சின்னம், பெயர், லெட்டர்பேடு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், அதிமுகவின் இரட்டை … Read more

அண்ணாமலை வேட்புமனு செல்லாது என அறிவிக்க கோரிக்கை!

annamalai

Annamalai : தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற  முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேட்புமனுக்களை ஏற்கப்பட்ட நிலையில், சில மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ஒருசில வேட்புமனுக்கள் நிறுத்தியும் வைக்கப்பட்டது. இந்த சூழலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனு … Read more

இறுதிநாளில் படையெடுத்த நட்சத்திர வேட்பாளர்கள்…

Kalanidhi Maran - A Rasa - K Annamalai

Election2024 : இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இன்று பிற்பகலுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். விசிக தலைவர் தொல் திருமாவளவன், … Read more

அரசியலை விட்டு விலகத் தயார்.! இபிஎஸுக்கு உதயநிதி ‘போட்டோ’ சவால்.!

udhayanidhi stalin - Edappadi Palanisamy

Udhayanidhi Stalin : நான் காலில் விழுவது போல போட்டோ காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் – உதயநிதி ஸ்டாலின். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். உதயநிதி விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியும், பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு உதயநிதியும் மாறி மாறி பிரச்சார மேடைகளில் பதில் கூறி வருகின்றனர். எய்ம்ஸ் செங்கல் : அமைச்சர் … Read more

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.! ஓபிஎஸ் பரபரப்பு கோரிக்கை.!

O Panneerselvam

ADMK : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிரிந்தனர். இதில் இபிஎஸ் பக்கம் அதிக ஆதரவு இருந்த காரணத்தால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்தும் தற்போது வரையில் இபிஎஸ்க்கு ஆதரவாகவே உத்தரவு வழங்கியுள்ளனர். மேலும், நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி பயன்படுத்தவும் … Read more

திருக்குறள் விவகாரம்.! பிரதமர் செய்வது நடிப்பு.. நாடகம்… அதிமுக முன்னாள் அமைச்சர் விளாசல்.!

PM Modi

CV Shanmugam : திருக்குறளை ஏன் தேசிய நூலாக பிரதமர் அறிவிக்கவில்லை என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார் . திண்டிவனத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் அதிமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அவர் பேசுகையில் பிரதமர் மோடி பற்றியும், திருக்குறள் பற்றியும் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தார். அவர் பேசுகையில், 10 வருடமாக மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். இதனால் அவர்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார். மக்கள் மகிழ்ச்சியாக … Read more

ராமநாதபுரம் தொகுதியில் இரண்டு ஓபிஎஸ் போட்டி.? குழப்பத்தில் ஆதரவாளர்கள்…

O Pannerselvam

Election2024 : ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மற்றொரு நபர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சையாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று … Read more

அதிமுகவின் தேர்தல் அறிக்கை காப்பி பிரிண்ட் இல்லை… ஆர்பி உதயகுமார்!

RB Udhayakumar

RB Udhayakumar : திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக முதலமைச்சர் முன்வைத்த விமர்சனத்துக்கு ஆர்பி உதயகுமார் மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் திமுக தேர்தலை அறிக்கையை அதிமுக காப்பி பிரிண்ட் அடித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். முதலமைச்சர் கூறியதாவது, மத்திய பாஜகவுடன் கூட்டணியாக இருந்து சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யாமல் துரோகங்களை … Read more

1000 ரூபாய் உரிமை தொகை 1500 ஆக தரப்படும்.. அண்ணாமலை உறுதி.!

Coimbatore BJP Candidate Annamalai

Annamalai : மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று கோவையில் கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை மகளிர் உரிமை தொகை பற்றியும் திமுக ஆட்சி பற்றியும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த முறை 400 எம்பிக்களுக்கு மேல் பாஜக ஜெயிக்கும் போது, … Read more

ஈபிஎஸ் துரோகம் பற்றி கேட்டதற்கு பாட்டிலால் அடி: ஓபிஎஸ்

OPS: எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை தட்டி கேட்டதற்கு என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள் என ஓ.பி.எஸ் பேச்சு ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அவர் கூறும் போதும், “என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி உதயகுமாருக்கு தகுதி கிடையாது. தேர்தலில் போட்டியிட முதல் விருப்பமாக ’வாளி’ சின்னம் கேட்டுள்ளேன், அதே போல பலாப்பழம் மற்றும் … Read more