ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இன்று தேர்தல்..!

madras high court

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சங்கத்திற்கு  கடைசியாக கடந்த ஆண்டு 2016 -ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்னர், … Read more

5 மாநில தேர்தலில் எத்தனை சதவீதம் பெண்கள் போட்டியிடுகிறார்கள்? காயத்ரி ரகுராம் கேள்வி!

Gayathri Raghuram

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது. இதையடுத்து, ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானாவில் வரும் 30-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று … Read more

#Justnow : 2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்..!

ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தேர்தல் தொடர்பாக, கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் – சோனியாகநதி

இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காலை 11 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்துவிட்டு வந்த சோனியாகாந்தியிடம், செய்தியாளர் மேடம் ஆர் யூ ஹப்பி! என  கேட்டனர். அதற்கு … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து, பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.  மக்களவை மற்றும் … Read more

#BREAKING : குடியரசு துணை தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது..!

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.  மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 788 பேர் இந்த … Read more

#Breaking:இலவசங்களுக்கு தடைகோரி வழக்கு – பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி:அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக இலவசம் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றன.இதனால்,நிதிச்சுமை மக்கள் தலையில்தான் விழுகின்றன.எனவே,இலவசங்களை வாக்குறுதியாக அறிவிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் தேர்தல் சின்னங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும் என்றும்,தேர்தல் வாக்குறுதியாக … Read more

தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை உயர்த்தி உத்தரவு..!

நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் செலவு தொகை ரூ.70 லட்சத்திலிருந்து ரூ.95 லட்சமாகவும், சட்டசபை தேர்தலுக்கு, 28 லட்சத்தில் இருந்து 40 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் எடுத்த முடிவின்படி, அதிகபட்ச தேர்தல் செலவு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சம் வரையிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சம் வரையிலும் செலவு … Read more

“ஜனநாயகம் தழைக்க தேர்தல் எப்படி நடக்க வேண்டும்?” – சொல்கிறார் ராமதாஸ்!

தேர்தல் சீர்திருத்தங்களின் மையக்கரு தேர்தலில் பண பலத்தை ஒழிக்க வேண்டும்; நல்லவர்கள் நாடாள வேண்டும் என்பது தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் தழைக்க தேர்தல் எப்படி நடக்க வேண்டும்? என்றும்,அவ்வாறு தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால் தேர்தலில் பண பலம் ஒழியும்,நியாயமாக தேர்தல் நடக்கும்,நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்றும்,இது நிச்சயம் ஒரு நாள் நடக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும்,இது … Read more