வயதானவர்களுக்காக சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்க வேண்டும் – எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா!

வயதானவர்களுக்காக சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் உள்ள சுவாமி மலை அதிக அளவில் மக்கள் வந்து செல்ல கூடிய இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் படிகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது மிக சிரமமாக உள்ளதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கூறியுள்ளார். எனவே, அவர்களுக்காக மின்தூக்கி அமைத்திட … Read more

#Breaking:பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பல்வேறு கொலை வழக்கில் சிறையில் உள்ள தஞ்சையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரவுடி ராஜா என்கிற கட்டை ராஜா மீது கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன.அந்த வகையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணம் தாலுகா காவல்நிலையத்தில் ரவுடி ராஜா மீது வழக்கு பதிவு … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்…!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  கும்பகோணத்தில், பொற்தாமரை குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த மேற்கு காவல்நிலைய முதல்நிலை காவலர் சுகுணா பார்த்துள்ளார். பின் அந்த பெண்ணுக்கு  சுகுனாவும், சக பெண் காவலர்களும் பிரசவம் பார்த்தனர். பின் தாயையும், சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, இந்நிலைமைக்கு ஆளாக்கிய பாலக்கரையை சேர்ந்த ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். … Read more

நிம்மதி தரும் நீராடல்…பக்தர்களால் நிறைந்த தெப்பம்..தீர்த்தவாரி கும்பகோணத்தில் வெகுசிறப்பு

கும்பகோணத்தில் மகாமக குளத்தில் வெகுச்சிறப்பாக மாசிமக திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும்  வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின்  மாசிமகவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.28ந்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அதே போல் பாணபுரீஸ்வரர், கம்பட்ட … Read more

கோலாகலத்துக்கு தயாராகும் கும்பகோணம்.!மாற்றத்தை அருளும் மாசிமகம் என்னைக்கு! தெரியுமா??

மாசிமாதத்தில் மகத்திருவிழாவிற்கு தயாரகிறது கோவில்களின் நகரமாக காட்சித் தரும் கும்பகோணம்  மாசிமகத்திருவிழா வரும் மார்ச்- 8ந்தேதி நடைபெறுகிறது என்று மகாமக அறக்கட்டளை பத்திரிக்கை வெளியிட்டுள்ளனர். கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற மாசி மகப் பெருவிழா நடப்பாண்டில்  மாா்ச் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று  நடைபெற்றது. தென் பாரத கும்பமேளாவின் மகாமக அறக்கட்டளைத் தலைவா் பி.கே. கல்யாணசுந்தரம் இப்பத்திரிக்கை விழாவிற்கு தலைமை ஏற்றார். இந்நிலையில் இவ்விழாவானது முறைப்படி சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிப். … Read more

வாங்கிய சரக்குக்கு பணம் கேட்டா கத்திய காட்டி மிரட்றாங்க மை லார்ட்!!

கும்பகோணத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், வாங்கிய சரக்குக்கு பணம் கேட்டால், கத்தியை காட்டி மிரட்டி, ஒற்றை கையில் குவாட்டர், மற்றொரு கையில் பட்டாக்கத்தியுடன் தெருவில் சாதரணமாக நடந்து சென்றனர். கும்பகோணம்-தஞ்சாவூர் செல்லும் சாலைக்கு அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வந்த இரண்டு நபர், சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்களை வாங்கினார்கள். வாங்கியவுடன், அங்கிருந்து கிளம்பினார்கள். அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள், வாங்கிய மதுபானங்களுக்கு பணம் கேட்டுள்ளனர். அப்பொழுது அவர்கள், அதில் ஒருவர், … Read more

சுவாமிமலையில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன்..!! கோலாகலமாகத் தொடங்கியது..!!!

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.அறுபடை வீடுகளில் முருகனின் 4ஆம் படை வீடான சுவாமிமலையில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழா தொடக்க நிகழ்வில் விநாயகர், சண்டிகேஸ்வரர் சகிதம் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கஜ வாகனம் பொறிக்கப்பட்ட கொடி வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் … Read more