விறுவிறுப்பாகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! காளைகள் முதல் டாஸ்மாக் வரை கட்டுப்பாடுகள் தீவிரம்.!

Avaniyapuram Jallikattu

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை (ஜனவரி 15 பொங்கல் தினத்தில்) அவனியாபுரத்திலும் அடுத்து (ஜனவரி 16 மாட்டு பொங்கல் அன்று) பாலமேட்டிலும் அதற்கு அடுத்ததாக ஜனவரி 17 காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. நாளை அவவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை- நீதிமன்றம் உத்தரவு..!

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தனர். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு  நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும்.? வெளியான முக்கிய அறிவிப்பு.!

Alanganallur Jallikattu

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். 9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி … Read more

#Breaking:தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி…தடுப்பூசி கட்டாயம்!

மதுரை:பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சிறிது நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.இதில் 700 காளைகள்,300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதையடுத்து,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் … Read more

சீறிப்பாய கோவில் காளைகளுக்கு அவனியாபுர ஜல்லிக்கட்டில் அனுமதி மறுப்பு..!!!

பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு வெகுச்சிறப்பாக நடக்கும் அதன் படி பாலமேடு,அவனியாபுரம்,அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் படு சூப்பராக இருக்கும்.இதில் முறுக்கி கொண்டு சீறிப்பாயும் காளைகளை அடக்க பாயும் இளங்காளைகளையும் காண மக்கள் திரண்டு கண்டு ரசிப்பர் மேலும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கோவில் காளைகளுக்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எப்போழுதும் கோவில் காளைகளுக்கு வாடிவாசலில் முதல் மரியாதை செய்வது தான் … Read more