ஹாட்-ட்ரிக் சிக்சர் அடித்து ஆட்டம் காட்டிய ஹர்த்திக்..!இடிந்து போன நியூ.பந்துகள்..!video உள்ளே

இந்தியா மற்றும் நியூலாந்துக்கு எதிரான இன்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி  4 விக்கெட்டை இழந்து தவித்தது இதன்பின் களமிறங்கிய இந்திய வீரர்களான  ஹர்த்திக்  மற்றும் அம்பதிராபயுடு,விஜய் உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய சரிவில் இருந்து மீண்டது.இதுவே … Read more

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் :முட்டி மோதி காலிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி..!!

ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணியானது காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது.4வது லீக் போட்டியில் ஹிமாச்சல் அணியை எதிர்கொண்ட தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் 12 புள்ளிகளுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

ஆறுமுறை கிராண்ட் சிலாம் பட்டம்..!! இப்ப அம்மா பட்டம்..!மீண்டும் டென்னிசை நோக்கி சானியா..!!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் மூடிசூடா  வீராங்கனையாக  வலம் வந்தவர் சானியா மிர்சா. மேலும் இரட்டையர் பிரிவில் ஆறுமுறை கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் ஆண் குழந்தை  ஒன்று பிறந்தது. இதனால் டென்னிஸ் உலகில் சிறிது ஓய்வு எடுத்த நிலையில் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டியில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது … Read more

தோனி தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்…!4 ரன்னில் 3 விக்கெட்..!தோல்விக்கு காரணம்..!விராட் கொக்கரிப்பு..!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் குவித்தது. இதில் அந்த அணியின் ஹேண்ட்ஸ்காம்ப் 61 பந்தில் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), உஸ்மான் கவாஜா 59 ரன்னும், ஷான் மார்ஷ் 54 ரன்னும் … Read more

கிராண்ட்ஸ்லாம் ஓபனில் விளையாட தகுதி பெற்றார்..! இந்திய வீரர் குணேஸ்வரன்..!!

டென்னிஸ் உலகில் கிராண்ட்ஸ்லாம் என்கிற உயரிய அந்தஸ்தான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரானது மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் கடந்த சில தினங்கள் இந்த தொடருக்காக தகுதி சுற்று போட்டிகள் நடந்தது. இதில் ஆண்கள் அணி பிரிவில் தகுதி சுற்றுக்கான 3வது மற்றும் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பானின் யோசுக் வாடானுகியை நேற்று எதிர்கொண்டு விளையாடினார்.இந்த போட்டியின் முடிவில்  குணேஸ்வரன் 6-7 (5), 6-4 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி … Read more

அரை சதத்தில் அசத்திய தோனி..!படக் அவுட்க்கு இந்திய அணியில் இவர்தான் காரணமாம்.!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தோனி திடீடென்று அம்பதி ராயுடுவால் ஆட்டமிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா  மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது சிட்னியில் ஜன..,12 தேதி அன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அந்த அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் அடுத்து … Read more

வாயால் வாழ்க்கையை துளைக்க காரணமான சர்ச்சை பேச்சு…!!ஸ்பான்சாரை இழந்த ஹர்திக்..!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சால் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விளம்பர ஒப்பந்தத்தையும் இழந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியினுடைய ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா இவரும் மற்றொரு முன்னணி வீரரான கே.எல்.ராகுலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்களின் வாழ்க்கை முறை குறித்து மற்றும் இனவெறியைத் தூண்டுகின்ற வகையில் இருவரும் பதிலளித்தனர். இவருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் நாடு முழுவதும் வந்ததை அடுத்து முன்வந்து தன் தவறுக்காக ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக … Read more

ஆஸ்திரேலியா அணியில் அடுத்த குழப்பம்…!2019 உலககோப்பை போட்டிக்கு இவர் இருக்காரா..?இல்லையா..???

கடும் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்  ஸ்டீவ் ஸ்மித்  2019 உலககோப்பை போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை எதிர்கொள்ள அணியில் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  தடையை நீக்க மறுத்துவிட்டது. இதனிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் மீது 1 … Read more

கிரிக்கெட்டில் ஒரங்கட்டப்பட்ட ஹர்திக்-ராகுல்..!!!சேர்க்கப்பட்ட 2 தமிழக வீரர்கள்..!!!

ஹர்திக் பாண்டியா,ராகுல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதன் எதிரொலியாக அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பெண்கள் குறித்து தவறாக கருத்துகளை தெரிவித்த ஹர்திக் பாண்டியா,ராகுல் மீது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முன்னோட்டமாக  இவர்கள் இருவரும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டிகளி இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள்  இருவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான … Read more