தூத்துக்குடி நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு;விண்ணப்பிக்க கடைசி நாள் செப் .20 ..!

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 148; பணியிடம்: தூத்துக்குடி பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Principal District Court, Thoothukudi 1. Masalchi/NightWatchman(TNBS) – 07 2. Office Assistant (TNBS) – 16 3. Xerox Operator (TNJMS) – 10 4. Junior Bailiff (TNJMS) – 16 … Read more

துாத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு அருகே சாலை விபத்து; 2 பேர் பலி..!

துாத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியினை சேர்ந்த கிளைட்டன் என்பவரது மகன் கிளிண்டன் (17). இவரது நண்பர் தெற்கு ராஜா தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரது மகன் டிஜு (18).இருவரும் திருநெல்வேலியில்  உள்ள தனியார்  பாலிடெக்னிக் கல்லுாரியில் 3 ம் ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும் கல்லுாரிக்கு  பைக்கில் சென்று வருவர். இன்றும் வழக்கம் போல் கல்லுாரி சென்று விட்டு,உறவினர் வீட்டிற்கும் சென்று விட்டு பைக்கில் திரும்பியுள்ளனர்.பைக்கை டிஜூ ஓட்டியுள்ளார். அப்போது வாகைகுளம் அருகே வரும் போது அவர்கள் முன்னே சென்ற … Read more

தூத்துக்குடியில் வளர்ந்த இயற்கை காளான் : கிராம மக்கள் மகிழ்ச்சி..!

தூத்துக்குடி  கோவில்பட்டி,  எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பெய்து வரும் மழையால் விளைநிலங்கள், இந்த நிலத்தின்  ஓரங்கள், தரிசு நிலங்கள் மற்றும் குப்பை மேடுகளில் இயற்கை காளான் மலர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமே மலரும் இந்த இயற்கை  காளான்களை காலை நேரத்தில் சூரியன் உதிக்கும்போது எறும்புகள்  தின்று விடும். இதனால் இதன் ஆயுட்காலம் ஒரு இரவு மட்டுமே ஆகும். இந்த இயற்கை காளான்களை கிராம மக்கள் மற்றும்  கால்நடை வளர்ப்போர் விளைநிலத்தில் இருந்து எடுத்து, வீடுகளுக்கு … Read more

தூத்துக்குடி St.Mother Theresa பொறியியல் கல்லூரியில் நீட்க்கு எதிராக போராட்டம்..!

தூத்துக்குடியில்  இன்று காலை St.Mother Theresa பொறியியல் கல்லூரி மாணவர்கள் NEET தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

குலசேகரபட்டினம் தசரா திருவிழா; 21-ஆம் தேதி தொடக்கம்..!

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 21-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை, இரவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு அலங்கார பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்..!

தசரா திருவிழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான அலங்கார பொருட்களை தயாரிக்கும் பணி உடன்குடி பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வேடங்களை அணியும் பக்தர்களும் பல்வேறு நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான கிரீடம், தலைமுடி, கைகள், மார்பு கவசம், திரிசூலம், வாள், ஈட்டி, கண்மலர், ஒட்டியாணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூரில் பொன்.ராதாகிருஷ்ணன்-கருணாஸ் திடீர் சந்திப்பு..!

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிதித்துறை இணை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று வந்தார்.  திருச்செந்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாஸ் எம்.எல்.ஏ. காரில் கோவிலுக்கு வந்தார். அப்போது நேருக்கு நேர் இருவரும் சந்தித்து கொண்டனர். இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணனும், கருணாஸ் எம்.எல்.ஏ.வும் காரிலிருந்து இறங்கி தனியாக சென்று சுமார் 15 நிமிடங்கள் பேசினர். அதன் பின்னர் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு … Read more

வாகன திருட்டு வழக்கு;5 பேர் கைது..!

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தான்குளம் மெயின் பஜாரில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் (வயது 21) என்பதும், அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். … Read more

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் ..!

தூத்துக்குடி மாநகராட்சி 17வார்டு கோவில்பிள்ளை விளை, அய்யார்விளை,பெரியர்நகர்,உள்ளிட்ட அனைத்து தெருக்களுக்கும் லாரி தண்ணீர் வழங்கபட்டு வந்தது தற்போது கடந்த 60நாட்களுக்கு மேலககா லாரி தண்ணீர் வரவில்லை இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கிருஷ்ணம்மாள் Cpmகிளைச்செயலாளர் தலைமையில் நடைபெற்றது.  D.ராஜா Cpmமாநகரச் செயலாளர் K.சங்கரன் Cpm ஒன்றியச் செயலாளர் M.S.முத்து Dyfi மாவட்டச்செயலாளர்  D.கண்ணன் Dyfi மாநகரச் செயலாளர் குமரேசன், சமுத்திரவேல்,அனுதயா, டேனியல்,வேலுச்சாமி,உட்பட கலந்துக்கொண்டனார்

தூத்துக்குடி கோயில் கும்பாபிஷேகத்தில் 74 பவுன் நகை திருட்டு..!

தூத்துக்குடி சிவன் கோயிலில்  14 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர்கள் பல பெண்களிடம் நகைகளைத் திருடியது தெரியவந்தது. நகையைப் பறிகொடுத்த பெண்கள், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காவல் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தனர். விசாரணையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 14 பெண்களிடம் ஏறத்தாழ 74 பவுன் நகைகள் திருடப்பட்டிப்பது தெரியவந்தது.  இதனிடையே, நகையைப் பறிக்க முயன்றதாக 3 பெண்களைப் … Read more