பத்திரிக்கையாளர் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை ரத்து செய்ய கோரி

நெல்லையில் பத்திரிக்கையாளர் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை ரத்து செய்ய கோரி தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், திருவைகுண்டம் ஆகிய இடங்களில் இன்சூரன்ஸ் பணம் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மறியல் நடைபெற்றது. இப்போராட்டத்தில் AIKS மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள்,மாவட்ட நிர்வாகிகள் இராமசுப்பு,நம்பி ராஜன்,ஸ்ரீனிவாசன்,அப்பாக்குட்டி,ரவி சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி lions club சார்பில் நடந்த சுற்றுசுழல் விழிப்புணர்வு இயக்கம்..!

தூத்துக்குடியில்,.VVD signal அருகே   lions club சார்பில்    சுற்றுசுழல் பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் வ.உ.சி பொறியியல் கல்லுரி மாணவிகள் பலர் கலந்து கொண்டு சாலையில் உள்ள பிளாஸ்டி பொருகளை எடுத்தும்  மற்றும் அனைவருக்கும்  சுற்றுசுழல் பாதுகாப்பு  விழிப்புணர்வு பற்றிய துண்டும் பிரசுதுங்கள்  வழங்கினர்.

தூத்துக்குடியில் 144 தடை…!

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும்  25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 26ம் தேதி  வெங்கடேச பண்னணயாரின் 14வது நினைவு தினத்தை யொட்டி  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் பயங்கர விபத்து : நூலிழையில் தப்பிய மாணவன்

தூத்துக்குடி: தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அரசு பேருந்துடன் மோட்டர் வாகனம் மோதி விபத்து அதிர்ஷ்ட வசமாக  மோட்டார் வாகனத்தில் வந்தவர் உயிர் தப்பினார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 3ஆம் ஆண்டு B.A(வரலாறு) படிக்கும் மாணவன் மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி  மாணவர் மாணவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார் தூத்துக்குடியில் வெடிக்கும் கைபேசி அழைப்பால் பரபரப்பு ! தூத்துக்குடியில் … Read more

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம் என்ற கோஷத்தோடு DYFI,தமுஏகச சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கூட்டம் முத்தையாபுரத்தில் நடைபெற்றது

முற்போக்கு எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்தும் கருத்துரிமை பாதுகாக்க கோரியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு DYFI தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் P. ராஜா தலைமை தாங்கினார் தமுஎகச மாவட்ட செயலாளர் தோழர் G. ஆனந்தன், AIDWA மாவட்ட செயலாளர் தோழர் பி.பூமயில். சிறுபான்மை மக்கள் நல குழு D. ராஜா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்

தூத்துக்குடியில் 6 கல்லூரிகளில் SFI தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

ம.சு பல்கலைகழ க துணைவேந்தரின் அராஜக போக்கையும் ,அநியாய கட்டண கொள்ளையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் ம.சு.பல்கலைகழக ஒருங்கிணைப்புக்குழு தொடர் போராட்டங்களை திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அறிவித்தது. கடந்த ஆண்டு கட்டணம் UG 75 , PG 130,M.phil 300 இந்த ஆண்டு உயர்த்தபட்ட கட்டணம் UG 110 , PG 175, M.phil 500 ஆனால் தமிழக உயர்க்கல்வி துறை பரிந்துறையின் படி கட்டணம் UG 65, PG 120, M.phil 150 இதன் ஒரு … Read more

நெல்லை அருகே உள்ள கோவிலில் 80 சவரன் நகைகள் கொள்ளை..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவல்லடி செண்பக நாச்சியார் கோவில் லாக்கரை உடைத்து 80 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்..!

தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்திலுள்ள விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று பிடித்து வரப்படும் மீன்கள் ஏலமுறையில் தமிழ்நாட்டுக்குள் மட்டுமல்லாமல் மற்ற அண்டை மாநிலங்களுக்கும் நல்ல விற்பனை ஆகிறது. இந்த மீன்பிடித்துறைமுகம் மூலம் 240 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். தற்போது அதிகமாக மீன் வரத்து இல்லாததால் தங்குகடலில் மீன்பிடிக்க அரசு அனுமதி கோருகின்றனர் மீனவர்கள்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு..!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5வது பிரிவில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.ஏற்கனவே முதல் மூன்று பிரிவுகளிலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.