வேட்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் – ஹெச். ராஜா

வேட்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் – ஹெச். ராஜா திருமாவளவன், மணிசங்கர் அய்யர் ஆகியோரை கண்டித்து, பாஜக சார்பில் காரைக்குடியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, வேட்டியை மடித்து கட்டினால் தானும் ரவுடி தான் என்றார்.

சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் குடும்பத்துக்கு காவல்துறை சார்பில் ரூ.55,000 நிதி!

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்தை சந்தித்து கூடுதல் ஆணையர் ஷேச சாயி ஆறுதல் காவல்துறை சார்பில் ரூ.55,000 நிதியை குடும்பத்தினரிடம் வழங்கி

குரூப்-4 தேர்வுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 16.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் – டிஎன்பிஎஸ்சி

ஆர்.கே.நகர் தொகுதிக்குள் உரிய ஆவணங்களின்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் !

ஆர்.கே.நகர் தொகுதிக்குள் உரிய ஆவணங்களின்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – தனியார் கால் டாக்சி நிறுவனங்களுக்கு தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை

ஜெயலலிதாவுடன் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும்!

ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது ஜெயலலிதா வீட்டில் இருந்த ஒரு நபர் பல்வேறு தகவல்களை எங்களுக்கு தந்துள்ளார் தீபா

பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு!முதல்வர்

ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு, காயமடைந்த காவலர்கள் மருத்துவச்செலவை அரசே ஏற்பு உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் … Read more

கன்னியாகுமரியில் மாவட்டத்தில் மழை!

கன்னியாகுமரி: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழை. தற்போது தான் ஒகி புயல் ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது.

திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும்!

கோயிலை இடிப்போம் என்பது அப்பட்டமான இந்து விரோத செயல்; திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும்” -ஹெச். ராஜா

டெங்கு வழக்கை ஜன.4-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

2017 அக். வரை டெங்கு காய்ச்சலால் 16,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 52 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை.அக். மாதத்திற்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.4-க்கு வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிய வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு. கடந்த 5 ஆண்டுகளில் இந்தாண்டு தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது – பதில் மனுவில் சுகாதாரத்துறை தகவல்.

ஆர்.கே.நகரில் தொடரும் பணப்பட்டுவாடா!பறிமுதல் செய்து அதிரடி …

ஆர்.கே.நகரில் இதுவரை ரூ.5,31,500 ரொக்கம் மற்றும் 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்