காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு ..காவல் நீட்டிப்பு ….

தாயை கொலை செய்த வழக்கில், தஷ்வந்துக்கு வரும் 29 வரை நீதிமன்ற காவல் – காஞ்சிபுரம் மாவட்டம்   செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவு..

திருச்சி மாவட்டம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டம் அருகே  விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

குஜராத்தில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும் !

குஜராத், இமாச்சலபிரதேச தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசின் வாக்கு சதவீதம் உயர்வு!

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்.ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

ரூ. 500, ரூ.1000 ஒழிந்தவுடன் பாஜகவும் ஒழிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு சவுக்கடி!

பேரவைத் தேர்தல் நடந்த 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ரூ. 500, ரூ.1000 ஒழிந்தவுடன் பாஜகவும் ஒழிந்துவிடும் என சிலர் கூறினர். நாட்டில் உள்ள மக்கள் மகிழ்ச்சியான தருணத்தில் இருந்து கொண்டுள்ளார்கள் – தமிழிசை

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க 15 கம்பெனி துணை ராணுவம் !

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க 15 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையம் அறிக்கை. தேர்தலை நியாயமாக நடத்த 7 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் – தேர்தல் ஆணையம்..

சென்னை கமலாலயத்தில் இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்!

குஜராத், இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக முன்னிலையில் முன்னிலையில் இருப்பதால் சென்னை கமலாலயத்தில் இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்.

ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்தும் நோக்கில் தி.மு.க.!

ஒவ்வொரு வாக்களர்களும் ஓட்டுக்கு பணம் பெறுவதாக திமுக சித்தரிக்கிறது. தேர்தலை நிறுத்தும் நோக்கத்துடன் திமுக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் புகார்.

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள்!

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும். இந்தாண்டு நடைபெறும் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான 502 புதிய தேர்வு மையங்கள் துவங்கப்படுவதுடன், மாணவர்களின் நலன் கருதி 10கி.மீ., தொலைவிற்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார்… திருநாவுக்கரசர் பளார் …

மோடி செல்வாக்கு குறைந்துள்ளதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார் அதிகாரம், பணபலத்தை காட்டியும் குஜராத்தில் குறைந்த இடங்களையே பாஜக பெற்றுள்ளது – திருநாவுக்கரசர்….