தூத்துக்குடி மாவட்டம் அருகே கண்மாயில் கிடந்த சிவலிங்கம் சிலை!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறை செல்லும் ரோட்டில் கல்லூரணி என்னும் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. கண்மாயின் நடுப்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனை அந்த பகுதியில் சென்ற மக்கள் பார்த்தனர். அவர்கள் சந்தேகத்தின் பேரில் புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அந்த மூட்டையில், 1½ அடி உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட சிவலிங்கம் … Read more

திருவாரூர் மாவட்டம் அருகே தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல், பருத்தியூர், காவாலக்குடி, நாளில்ஒன்று, கண்கொடுத்தவனிதம், விடயபுரம், முசிறியம், திட்டாணிமுட்டம், மேலராதாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களுக்கு தேவையான பாசனநீர் பாண்டவையாற்றில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில் பாண்டவையாற்றில் இருந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களில் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் பயிர்கள் … Read more

நெல்லை மாவட்டம் அருகே சிறுத்தைகளை பிடிக்க கூண்டு! வனத்துறையினர் நடவடிக்கை…

நெல்லை மாவட்டம் வடகரை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைப்பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 15-ந்தேதி காலையில் இவர் ராயர்காடு பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விட்டு இருந்தார். அப்போது புதருக்குள் இருந்து வந்த 2 சிறுத்தைகள், ஆடுகள் மீது பாய்ந்து தாக்கின. ஒரு ஆட்டை அடித்துக் கொன்று தின்றன. மேலும் 2 ஆடுகளை அடித்துக் கொன்று காட்டுக்குள் இழுத்து சென்று விட்டன. ஒரு ஆடு காயத்துடன் தப்பி ஓடி வந்து … Read more

தேனியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

தேனி என்.ஆர்.டி. சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 1–12–2015 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். களப்பிரிவு ஊழியர்களுக்கு கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த … Read more

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

குடிநீர் வடிகால் வாரிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தென்மண்டல செயலாளர்கள் ராமநாதன், சிவசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட மொத்தம் 33 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு … Read more

சேலம் அரசு பள்ளி ஆசிரியரிடம் மோசடி! கர்நாடக வாலிபர் கைது…

சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி சித்ரா பெயரில் ஆன்லைனில் பிட் காயின் (சர்வதேச கரன்சி) வாங்கி, அதன்மூலம் வருவாய் ஈட்டும் தொழிலை செய்து வந்தார். அந்த வகையில் ஆன்லைன் மூலமாக பிட் காயின் நிறுவனத்தில் முதற்கட்டமாக ரூ.13 லட்சத்தை சக்திவேல் முதலீடு செய்தார். மேலும், தனது வருமானத்தை பெருக்க வேண்டி மீண்டும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்ததாக … Read more

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23–ந்தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார். விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். பின்னர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் ராமேசுவரம் செல்கிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராமேசுவரம் வந்தனர். அப்போது மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளம், அப்துல் கலாம் நினைவிடம், … Read more

புதுக்கோட்டை மாவட்டம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி !

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியில் உள்ள புலியூர், வீரப்பட்டி, கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம், கிள்ளனூர், காட்டுக்கோட்டைப்பட்டி பகுதியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த போவதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் அப்பகுதியில் நேற்று அதிகாலை முதலே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந் நிலையில் புலியூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வாலிபர்கள் வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து குவிந்தனர். இதற்கிடையில் புலியூர் பகுதியில் ஓரிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலை நேற்று அதிகாலை போலீசார் அகற்றினர். பின்னர் … Read more

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பினால் சித்தளியை சேர்ந்த ராஜா, ஓதியத்தை சேர்ந்த செல்வம், பசும்பலூரை சேர்ந்த அர்ஜூனன், கூத்தூர் ராமலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அருங்கால் கல்லக்குடியை சேர்ந்த ராமன், சேலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் இறந்திருப்பதாகவும், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் … Read more

நீலகிரி அருகே தேரோட்டத்தை போலீசார் நிறுத்தியதால் பரபரப்பு!

ஊட்டி சிறுவர் மன்றம் அருகே அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 16–ந் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உ‌ஷ பூஜை, சீவேலி, பஞ்ச கவ்வியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ‘சாமியே சரணம் அய்யப்பா‘ என்ற கோ‌ஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை … Read more