காஷ்மீர் விவகாரம் : லண்டனில் இந்திய தூதரக கண்ணாடியை உடைத்து பாகிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டம்!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மற்ற நாடுகளின் உதவியை நாடும் எந்த பலனும் இல்லாமல் போனது. இதனால் தொடர்ந்து தனது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்துக்கு எதிரே பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளவர்கள் … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் நிச்சயமாக தமிழகம் இணையும்! அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்!

மத்திய அரசானது நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இது அந்தந்த மாநில உரிமைகளை பறிப்பது போலவும், உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது பேட்டியளித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், ‘ மத்தியஅரசின் ஒரே நாடு ஒரேரேஷன் கார்ட் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும். இந்த திட்டம் மாநில அரசின் விதிகளுக்கு உட்பட்டு தமிழகம் இணையும் எனவும்,  அதேபோல வெளிமாநிலங்களில் ரேஷனில் அரிசி … Read more

சென்றாண்டு இரண்டாமிடம்! இந்தாண்டு நாங்கதான் முதலிடம்! கெத்து காட்டும் மதுரை ரயில் நிலையம்!

மதுரை ரயில் நிலையமானது பெரிய ரயில் நிலையம் என்பதை விட மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மதுரை ரயில்நிலையம் தான் இந்தியாவின் இரண்டாவது அழகான ரயில் நிலையம் என சென்றவருடம் அறிவிக்கப்பட்டது. தற்போது மதுரை ரயில் நிலையம் முதலிடம் பிடிக்க பல்வேறு முயற்சிகளை நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக சுமார் 10 கோடி செலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   மதுரை ரயில் நிலையத்தில்,  படிக்கட்டுகளில் பளிங்கு கற்கள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் … Read more

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை திடீரென இடமாற்ற பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதியரசர் தாஹிம் ரமணியை திடீரென மேகாலயா உய்ரநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மற்ற  கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போல மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதியரசர் ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கொலிஜியம் எனும் அமைப்பானது நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் முறையாகும். இந்த அமைப்பில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர்.

மொத்தம் எத்தனை ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான தமிழக அரசு விருதுகள்?!

நாளை செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். கல்வியாளரும், தத்தத்துவவியலாளருமான இவரது பிறந்த நாளைத்தான் 1962 முதல் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஆசிரியர் தினத்தின் போது சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு விழா நாளை மதியம் 2 மணி அளவில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து … Read more

3 மாதத்தில் மட்டும் 10 ஆயிரதிற்கும் மேற்பட்டோரிடம் 16 லட்சத்துக்கும் அதிகமாக அபராத வசூல் மழை!

சென்னை மாநகரில், அதன் முக்கிய ஏரியாக்களுக்கு செல்ல உள்ளூர் பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ், ஒருநாள் பாஸ் என பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இருந்தும் சென்னை உள்ளூர் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 10, 791 பேர் சென்னை பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 16 லட்சத்து 80 ஆயிரத்து 850 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தற்போது … Read more

அதிக டெஸ்ட் போட்டி ஜெயித்த கேப்டன் தோனியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது திறமையினால் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை  முறியடித்துள்ளர். புதிதாக சாதனைகளையும் படைத்துள்ளார். மேலும் தனது தனது தலைமை பொறுப்பினாலும் அணியை வெற்றிப்பாதைக்கு பலமுறை அழைத்து சென்றுள்ளார். இதில், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் நேற்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது விராட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி . இதன் மூலம் 28 டெஸ்ட் போட்டிகளை வென்று இந்திய கேப்டன்களில் … Read more

நிலவை நோக்கிய பயணத்தில் அடுத்த புதிய மைல்கல்லை எட்டிய சந்திராயன் 2!

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம், நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக கடந்த மாதம் 20ம் தேதி சந்திராயன்-2 பூமியின் நீள் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப் பாதைக்கு தன் பயணத்தை மாற்றியது. அதன் பிறகு நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் சந்திரனிலிருந்து ஆர்பிட்டலிலிருந்து லேண்டர் விக்ரம் தனியாக பிரிந்தது. இன்று காலை 8.50 மணிக்கு நிலவின் வட்டப்பாதைக்கு லேண்டர் தனியாக பிரிந்து … Read more

கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய தமிழ் திரைப்படம்! மலேசிய அமைச்சர் பாராட்டு!

நடிகை ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ராட்சசி. இப்படத்தை கௌதம்ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் பள்ளி மாணவர்கள் பற்றியும், கல்வியாளர்கள் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் நல்ல கருத்துக்களையம், கல்வித்துறையில்ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் என பல கருத்துக்களை முன்வைத்து முன் வைத்து எடுக்கப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது இந்த படத்தை மலேசிய கல்வி அமைச்சர், மாஸ்லே பின் மாலிக், தனது சமூக … Read more

பொட்டு வைத்து தேங்காய் உடைக்கப்பட்டு பூஜையுடன் வரவேற்கப்பட்ட அப்பாச்சி ரக போர் விமானங்கள்!

இந்திய விமானப்படையில் தற்போது புதியதாக அப்பாச்சி AH 64a ரக போர் விமானங்கள் மொத்தம் 8 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை அமெரிக்காவை சேர்ந்த போயிங் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த போர் விமானத்தில் இருவர் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் விமானத்தினை இயக்க, இன்னொருவர் ஆயுதங்களை கையாளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக விமானத்தை உபயோகப்படுத்த விமானப்படை வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி நடைபெற்று பின்னர் இந்த விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். இந்த போர் … Read more