ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டு விபத்து…5 பேர் படுகாயம்!

Hyderabad - Railway

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை நம்பள்ளி ரயில் நிலையம் அருகே ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மீட்புப்பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தடம் புரண்டதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. சமீபகாலமாக அடுத்தடுத்து ஏற்படும் ரயில் விபத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மன்னனை காணவில்லை.. ஈக்வடாரில் … Read more

தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு – முதலமைச்சர் அறிவிப்பு

trb rajaa

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்றும் இன்று பிரமாண்டமாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் உலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர் என பலரும் பங்கேற்றனர். ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்படி, இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.54 லட்சம் பேருக்கு … Read more

ரூ.6.64 லட்சம் கோடி… முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி – முதலமைச்சர் உரை!

TNGIM2024

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாள் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தனது சிறை விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இமாலய … Read more

புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்!

Global Investors Meet 2024

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாளான இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முன்னணி நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதனிடையே,  புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை … Read more

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – இன்று 2-ஆம் நாள் அமர்வு!

Global Investors Meet 2024

சென்னை நந்தனத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நேற்று தொடங்கியது. அப்போது, டாடா, டிவிஎஸ், ஹூண்டாய், கோத்ரேஜ், குவால்காம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. உலக முன்னணி நிறுவன தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2-ஆம் நாள் … Read more

நெல்லை, தூத்துக்குடியில் டாடா… தமிழ்நாட்டில் ரூ.7000 கோடி கூடுதல் முதலீடு!

tata

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் … Read more

சென்னையில் அடிடாஸை தொடர்ந்து போயிங் நிறுவன மையம்!

Boeing Company

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளது. அதன்படி, இந்த … Read more

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!

Tamilnadu School Students

கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்க காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், … Read more

தமிழ்நாட்டில் “அடிடாஸ்” நிறுவனம்… இந்தியாவில் இதுவே முதல்முறை!

Adidas

உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பின் பிரபல நிறுவனமான “அடிடாஸ்” நிறுவனம், சீனாவுக்கு பிறகு இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் … Read more

உலக முதலீட்டாளர்கள் மாநாடு… ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டம்!

Global investors summit

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் வளர்ச்சிக்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7, 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக, குறு, சிறு தொழில்துறை சார்பில் மாவட்டந்தோறும் … Read more