ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு முதல் எதிரி நாங்கள் தான்!

தமிழர் மண்ணை தமிழரே ஆள வேண்டும்.ரஜினியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்..அரசியலில் எது சரியில்லை என ரஜினி தெளிவாக கூற வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது இனத்தையே மாற்றி ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். source: dinasuvadu.com

மேஷ ராசி நேயர்களே !2018 ஆங்கில புத்தாண்டு பொதுப்பலன்கள்….

மேஷ ராசி நேயர்களே ! அனைவரிடமும்  கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்த 2018 புத்தாண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சனி பகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்திலேயே தொடர்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். … Read more

நான் அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டி: ரஜினி

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில்  தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்  நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். 6-வது நாள் சந்திப்பான இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பேசியதாவது: அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். … Read more

பதுங்கி பாய காத்திருக்கும் ரஜினிகாந்த்!

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும்  ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார் .அதில் பேசிய ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியது , “உங்களுக்கு உங்கள்  குடும்பம்தான் முக்கியம் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் எனவும் கூறினார் .மேலும் ரசிகர்களிடம்   உங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது”  எனக் கூறினார். ரசிகர்களை சந்திப்பதற்கு முன் “எதிர்கால அரசியல் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக்கூறினார்.பின்னர் ரஜினி கூறும் போது  4 நாட்களில் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” ரசிகர்களை சந்திக்க கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் புறப்பட்ட போது நடிகர் … Read more

தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் விசாரணை ஆணையத்திடம் ஜெ. வீடியோ ஒப்படைப்பு!

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், கடந்த 20ஆம் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், வெற்றிவேல் மீது, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தரப்பிலும், வெற்றிவேல் மீது, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை அளிக்குமாறு, வெற்றிவேலுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ நகலை, வெற்றிவேல் தரப்பில், … Read more

ஆர்.கே.நகர் தேர்தலில் டோக்கன் வழங்கிய 4 பேர் கைது !

தேர்தல் முடிந்தாலும் இன்னும் பரபரப்பான தொகுதியாகவே இருந்து வருகிறது ஆர்.கே.நகர் தொகுதி. கொருக்குபேட்டையில் 20 ரூபாய் டோக்கன் மூலம் 450 பேருக்கு பணம் பட்டுவாடா செய்ததாக டிடிவி ஆதரவாளர்கள் 4 பேரை ஆதாரத்துடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.கே.நகருக்கு உட்பட்ட கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகரில் ஜான் பீட்டர் என்பவரிடம் தகராறில் ஈடுபட்ட சிலர் 20 ரூபாய் நோட்டை கொடுத்து பணம் தருவதாக வாக்குறுதி அளித்தது போல், தேர்தல் முடிவு வந்த பின்னர் பணம் தரவில்லை என … Read more

தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுப்பவர்களை வரவேற்கும்!

தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுப்பவர்களை பாரதிய ஜனதா வரவேற்கும் .ரஜினிகாந்தின் தற்போதைய பேச்சில் உறுதி தெரிகிறது; ரஜினி டிசம்பர் 31 ஆம் தேதி உறுதியான அறிவிப்பை வெளியிடுவார் தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார் . சற்று முன் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்த அறிவிப்பை வருகின்ற 31 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தது குறிபிடத்தக்கது. source: dinasuvadu.com

தினகரனின் வெற்றி, கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி அது நியமானது இல்லை !

வாழ்க்கை என்றாலே போர்தான், அரசியல் களம் என்பதே போர்தான். தினகரனின் வெற்றி, கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி அது நியமானது இல்லை .ஸ்டாலினுடன் கூட்டுசேர்ந்து தினகரன் சதி செய்துள்ளார். இருவரும் கூட்டு சதிகாரர்கள் எனவும் கூறியுள்ளார் . தினகரனுடன் மறைமுகமாக கூட்டு வைத்ததால் திமுகவுக்கு உள்ளேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார். source: dinasuvadu.com

தினகரனால் ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை தினகரன் நிரப்புவதாக நான் கருதவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள சின்னமலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி னர். அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை தினகரன் நிரப்புவதாக நான் கருதவில்லை. பொதுத் தேர்தல்தான் அதை முடிவு செய்யும். இப்போது அதுகுறித்து கருத்து … Read more

ஆர்.கே.நகரில் திமுகவிற்கு ஏற்பட்ட படுதோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய விசாரணைக் குழு!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 29ந்தேதி கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. ஆர்.கே.நகரில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் … Read more