மருத்துவர்கள் 105 பேருக்கு முதலமைச்சர் பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கினார்!

  பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 105 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். source: dinasuvadu.com

நீதிபதி ஆறுமுகசாமி கமிசன் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆஜர்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேரில் ஆஜராகியுள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட போது அதற்கு கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்தார். அந்த வீடியோவை எடுத்தது சசிகலா என்று தெரிவித்த கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா தனக்குப் பின்னால் இருக்கும் மருத்துவக் கருவிகளைப் பார்ப்பதற்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்னும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். கிருஷ்ணப்பிரியாவுக்கு வீடியோ குறித்தும் ஜெயலலிதா சிகிச்சை … Read more

சமூகவலைதளங்களில் திட்டுவாங்கும் பிரகாஷ்ராஜ்

ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததும் இதற்க்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டு இருக்குகிறது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில், கர்நாடகாவை ஒரு கன்னடன் தான் ஆளவேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார். தற்போது கர்நாடகாவை சேர்ந்த ரஜினி தமிழ்நாட்டை ஆள நினைத்து பேசுவதை ஆதரிப்பது. தமிழர்களை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராகவும், இரு நிலைபாட்டோடு இருப்பதாகவும் கூறி … Read more

லண்டனில் காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்கு?

ஜாதி, மதம் என்று பார்க்காமல் காதலில் விழுந்திருக்கிறார். லண்டன் நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலிக்கிறார். சமீபகாலமாக இருவரும் டேட்டிங் செய்துவருகின்றனர். சில வாரங்களுக்கு முன் கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஸ்ருதி பட்டு சேலை உடுத்தியும், ைமக்கேல் பட்டு சட்டை, பட்டு வேட்டி உடுத்தியும் பங்கேற்றனர். பின்னர் இருவரும் லண்டன் பறந்தனர்.கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் மைக்கேல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார் ஸ்ருதி. அப்போது … Read more

ரஜினியும், கமலும் அரசியலில் ஒன்றுகூடி பயணிக்கப் போகிறார்களா?மலேசியாவில் ஜன.6-ம் தேதி ரஜினி – கமல் சந்திப்பு…

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வரும் 6-ம் தேதி ரஜினிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பு நடக்க உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் வரும் 6-ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, முதல் முறையாக இருவரும் சந்தித்துப் பேச உள்ளனர். இதற்காக, ‘விஸ்வரூபம் 2’ படப் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கிருந்து … Read more

புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நள்ளிரவில் இருவர் உயிரிழப்பு; 177பேர் காயம்……

  சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரெய்மான் என்பவர் லேங்ஸ் கார்டன் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது தடுப்புச் சுவரில் மோதித் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். ஆவடி இஎஸ்ஐ அண்ணாநகரைச் சேர்ந்த பால் என்பவர் ஆவடி பேருந்து பணிமனை எதிரே சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார். நேற்று நள்ளிரவில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட சாலை விபத்துக்களில் 177பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 84பேர் ராயப்பேட்டை, சென்ட்ரல், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், … Read more

புத்தாண்டை முன்னிட்டு கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து பெற்றனர்!

புத்தாண்டை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர், திமுக தலைவரும், தங்கள் தந்தையுமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நண்பகலில்கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாளுடன் சென்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். source: dinasuvadu.com

நான் சட்டப்பேரவையில் பேசினால் அன்றே அலறத்தொடங்குவார்கள் அதிமுகவினர் …….

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டன்கோவிலில் உள்ள குலதெய்வம் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்துவதற்காக அவர் அங்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தினகரன், சட்டப்பேரவையில் தான் என்ன பேச போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு கூறினார்.அதிமுகவினர் தோல்வி பயத்தால் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பதாக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்… source: dinasuvadu.com

ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார்!

ஆர்.கே.நகரில் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 6,500 விசைப்படகுகளில் டிரான்ஸ்மீட்டர் கருவி பொருத்தப்படும். மேலும் ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது எடுத்தாலும் தயாராக இருக்கிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஆர்.கே.நகரில் பேட்டியளித்துள்ளார். source: dinasuvadu.com

ஜனநாயக போரில் நமது படையும் போட்டியிடும் !ரஜினிகாந்த்…..

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தின் உள்ளே சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். திருமண மண்டபத்துக்கு வெளியிலும் பல ஊர்களைச் சேர்ந்த ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியை ஏந்தியபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர். இதனிடையே, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ராகவேந்திரா திருமண … Read more