பிபிஎல் போட்டி : பிவி.சிந்து அணி வெற்றி

சென்னையில் 3வது ஆண்டு பேட்மிட்டன் பிரிமீயர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி சார்பில் பி.வி.சிந்து விளையாடி வருகிறார். நேற்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின இதில் சென்னை அணி சார்பில் பி.வி.சிந்துவும், பெங்களூரு அணி சார்பில் கிறிஸ்டி கில்மவுருவும் மோதினர். இதில் 15-9, 15-14 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இன்றைய ஆட்டத்தில் மும்பை-அகமாதாபாத் அணிகள் மோதுகின்றன. source : dinasuvadu.com

தமிழகத்தில் 6-வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாதது, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், கடந்த வியாழக்கிழமையன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால், தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வேலைநிறுத்தத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கு ஒன்றில், தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று உத்தரவிட்டிருந்தது. நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வாதிடப்பட்டபோது, ஓய்வூதிய நிலுவை குறித்து முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், பொதுமக்கள் நலன் கருதி … Read more

துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து ஊழியர்கள் பல கோரிக்கைகள் முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 5 நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ’15 ஆண்டுகால பிரச்சனையை ஒரே நாளில் தீர்க்க சொல்லி போராடுவது நியாயமற்றது. மேலும், தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல சொல்ல வேண்டும். பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வேலைக்கு திரும்ப செல்லாத ஊழியர்களுக்கு துறை சார்ந்த நடவடிக்கை … Read more

சென்னை தனியார் பள்ளியில் தீவிபத்து

சென்னை மயிலாப்பூர் பி.எஸ். பள்ளி வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் முயற்சியில் 2 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. பள்ளி வளாகத்தில் குவித்து வைத்து இருந்த குப்பை குவியலால் திடீரென தீ பற்றி அந்த வளாகம் தீப்பற்றி கொண்டது. இதனால் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். source : dinasuvadu.com

அடுத்த 6 நாட்களுக்கு குளிர் : 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் குளிர் காலம் மற்ற வருடத்தை போல் அல்லாமல் சற்று அதிகமாகவே உள்ளது. இன்னும் குளிர் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்த 6 நாட்களுக்கு இருக்கும் என வானிலை எச்சரித்துள்ளது. தென் மேற்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கிழக்கு திசையில் வீசும் காற்று ஈரப்பதத்துடன் இருப்பதாக இருப்பதால் குளிர் அதிகமாக உள்ளதாகவும், தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ருப்பதாகவும் தெரிவித்துள்ளார். source : dinasuvadu.com  

இனி வரும் நாட்களில் சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நிகழ்வுகள்!

ஆர்.கே.நகர் இடைதேர்தளுக்கு பிறகு சட்டப் பேரவை இன்று நடைபெற்றது.ஆளுநர் பன்வரிளால் ப்ரோஹித் உரையாற்றினார்.அதை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில்  சட்டப்பேரவையில் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அவை ஜன.9: ஒகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். ஜன.10: ஆளுநர் உரை மீது விவாதம். ஜன.11: ஆளுநர் உரை மீதான விவாதம் தொடரும். ஜன.12: முதல்வர் பதிலுரை மேலும் 4 நாட்களும் கேள்வி – பதில் … Read more

சிக்கலில் ரஜினியின் பாபா முத்திரை! உரிமை கொண்டாடி தனியார் நிறுவனம் வழக்கு …….

அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். விரல்களை மடக்கி ‘பாபா’முத்திரை காட்டும் ரஜினி, இதை அந்த படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில், மேடையில் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகம் முழுவவதும் உள்ள ரஜினி ரசிகர்களும், அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை, தயாரித்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த முத்திரை, தங்கள் நிறுவனத்தின் லோகோ போலவே இருப்பதாக கூறி, ‘வாக்ஸ்வெப்’ … Read more

ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் ஏற்கனவே நிலுவை தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிரபித்து இருந்தது. தற்போது மீண்டும் ஒரு உத்தரவை பிரபித்துள்ளது. அதில் குறிப்பிட பட்டுள்ளதாவது, பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாதவர்களுக்கு தமிழக அரசு நோட்டிஸ் அனுப்பி பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், … Read more

ஆளுநரின் உரை உரையே இல்லை !தினகரன் பாய்ச்சல் ….

ஆளுநர் உரையில் தீர்க்கமான அறிவிப்புகள் எதுவும் இல்லை.மீத்தேன் திட்டத்தை தடை செய்வது குறித்த அறிவிப்பு இல்லை. கூடங்குளம் அணு உலையின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தலும் இல்லை.தமிழக அரசு முடங்கியுள்ள நிலையில் 2030க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம்?; ஆளுநர் உரையில் முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் … Read more

அஜித் விஜய்க்கு அடுத்து நான்தான் என நிருபிக்கும் சிவகார்த்திகேயன் : வேலைக்காரன் பிரமாண்ட வசூல்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இப்போது விஜய் அஜித் திரை மார்கெட்டை தொட நெருங்கி கொண்டிருக்கிறார் நடிகர் சிவகர்த்திகேயன்.  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுகொண்டிருக்கும் திரைப்படம் வேலைக்காரன். இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாது திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமே சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சிங்கம் 3 ஆம் பாகத்தின் வசூலை இப்படம் முறியடித்துள்ளது. விவேகம் திரைப்படம் தமிழகத்தில் … Read more