ஒரே நேரத்தில் சென்னை அருகே சிக்கிய ரவுடிகள் 74 பேர் சிறையில் அடைப்பு!

ஒரே இடத்தில்  சென்னை அருகே சிக்கிய 74 ரவுடிகள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மலையம்பாக்கம் பகுதியில் ரவுடியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 75 ரவுடிகளை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்கள் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பின் சென்னையில் உள்ள தொடர்புடைய பல்வேறு காவல் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மீது உள்ள பழைய குற்ற வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரவுடிகளில் 71 பேர் … Read more

பல சரித்திர தலைவர்கள் மத்தியில் தளபதி விஜய்!!!

சினிமாவில் கால்பதித்த ஆரம்ப கால கட்டத்தில் பல சோதனைகளையும், பல அவமானங்களையும் தாங்கி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸின் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய். இவரின் சினிமா பயணங்களை பற்றிய புத்தகம் ஒன்று “விஜய் ஜெயித்த கதை ” என்ற பெயரில் ஜனவரி மாதம் வெளியாகி இருந்தது. இந்த புத்தகத்தை சபீதா ஜோசப் என்ற எழுத்தாளரால்  எழுதப்பட்டு, ரசிகர்கள் பலராலும் வாங்கி படிக்கப்பட்டது. திருநெல்வேலியில் நாளை நமதே என்ற … Read more

நீதிபதி பத்மநாபன் முதல்கட்ட விசாரணை !

மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதி பத்மநாபன்  போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக வருகின்ற 9ஆம் தேதி தனது விசாரணையை மேற்கொள்கிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், வருகிற 9ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய பேரிடர் நிர்வாக கூட்டரங்கில் நீதிபதி … Read more

பஸ்பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை!

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சென்னை மாநகர பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு அதே விலையில் தொடர்ந்து விற்கப்படும் என தெரிவித்துள்ளார். இதே நேரத்தில் சீசன் டிக்கெட்டுகளுக்கான குறைந்த பட்ச கட்டணம் 320 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு சியுஜி செல்போன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து கட்டணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு … Read more

கொள்ளையன் நாதுராமுக்கு வந்த ஆசையை பாருங்களே!மிகப்பெரிய அரசியல்வாதியாக வலம் வரணுமாம் …

கொள்ளையன் நாதூராம் ராஜஸ்தானில் தனது சொந்த ஊரில் மிகப்பெரிய அரசியல் வாதியாக வலம் வருவதற்காக கொள்ளை அடித்து பணம் சேர்த்தாக  பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கொளத்தூரில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை கடந்த நவம்பர் மாதம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை ராஜமங்கலம் போலீசார் நாதுராம், தினேஷ் செளத்ரி, பக்தா ராம் ஆகியோரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்றது. 6 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று … Read more

பட்டாசுக்கு எந்த பாதிப்பும் இல்லை : சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சந்தித்தனர். பின்னர் சபாநாயகர் தம்பிதுரை எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்படாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பட்டாசு தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை . பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு உற்பத்திக்கு எந்த … Read more

அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்கள் : முக.ஸ்டாலின் பேட்டி

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் 27-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், 29-ந் தேதி மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், பஸ் கட்டண உயர்வை குறைக்க அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், … Read more

எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டவே வேண்டாம் : டிடிவி அதிரடி

மக்கள் சந்திப்பு பயணத்தை டி.டி.வி.தினகரன் இந்த மாதம்  2-ந் தேதி முதலே தஞ்சைஇலிருந்து மக்களை சந்தித்து வருகிறார். நேற்று திருவையாறு பகுதியில் பிரசாரம் செய்தார். இதனையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறக்கோரி போராட்டம் நடந்து வரும் கதிராமங்கலம் கிராமத்துக்கு மக்களை சந்திக்க தினகரன் சென்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், பாட்டிலில் தினமும் குடிநீர் கலங்கலான நீரை தினகரனிடம் காண்பித்து குறைகளை தெரிவித்தனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு … Read more

முதலமைச்சர், து .முதலமைச்சர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி உயர்நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்குமாறு,  உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கிய தலைமைத் தேர்தல் ஆணையம், அவர்களது அணியே அதிமுக என்றும் அங்கீகாரம் வழங்கியது. இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு ஒதுக்கிய குக்கர் சின்னத்தையே உள்ளாட்சித் … Read more

புதிய முயற்சியில் காவல்துறை!இனி வாரம் ஒருமுறை கச்சேரி …..

காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் மக்கள் கூடும் இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையேயான நல்லுறவை வளக்கும் விதமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையின் இசைக்குழுவைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. 10 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரமே இசை நிகழ்ச்சிகளை தொடங்குமாறு அதில் … Read more