INDVSWI தொடர்- இவர்தான் 4-வது இடத்துக்கு பொருத்தமானவர் – தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்

INDVSWI தொடர்- இவர்தான் 4-வது இடத்துக்கு பொருத்தமானவர் – தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்

பங்களாதேஷ் அணி, இந்தியா சுற்று பயணத்தில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் விளையாடியது பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பங்களாதேஷ் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா சுற்று பயணத்தில் தற்போது இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3, டி20 மற்றும் ODI  ஒரு நாள் தொடர் போட்டி விளையாட உள்ளது.
முதல் போட்டி வரும் டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை 6-ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காள தேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர், 4-வது இடத்திற்கான பொருத்தமான வீரர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
2017- ல் இலங்கைக்கு எதிரான போட்டியில்,  வீராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், துரதிஷ்டவசமாக தொடர்ந்து அணியில் இடம் பெற முடியாத சூழல் உருவாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருந்தாலும், ஷ்ரேயாஸ் அய்யர், தலை சிறந்த வீரராக வளர்ந்துள்ளார் என எம். எஸ்.கே. பிரசாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டி 20 போட்டிகளுக்கான இந்தியா அணி:
விராட் கோலி (சி), ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, தீபகுவர்.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்தியா அணி:
விராட் கோஹ்லி (சி), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், புவனேஸ் குமார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube