டி20 உலகக் கோப்பை : முதல் போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் இந்திய அணி.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

டி20 உலகக் கோப்பை : முதல் போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் இந்திய அணி.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

  • ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி பிப்ரவரி 21 முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் 10 அணிகள் கலந்துகொண்டு, மொத்தம் 23 ஆட்டங்களில் விளையாட உள்ளன. அந்த வகையில் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதைத்தொடர்ந்து வங்கதேசம், நியூஸிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுடன் லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 08-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி பட்டியல் அண்மையில் வெளிவந்தது. மேலும் இந்திய அணி முதல் சாம்பியன் பட்டத்தை எதிர்நோக்கி விளையாட இருக்கும் நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது. இதனிடையே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து பயிற்சி போட்டியில் ஈடுபட்டு வருகிறது என்று குறிப்பிடப்படுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை இந்திய அணி:

ஹர்மான்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஷாஃபிலி வெர்மா, ஜெமிமா ராட்ரிகுஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், தானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்திராகர், அருந்ததி ரெட்டி.

மகளிர் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணி: 

மெக் லேன்னிங் (கேப்டன்), ரேச்சல் ஹெயின்ஸ் (துணை கேப்டன்), எரின் பா்ன்ஸ், ஆஷ்லி காா்டனா், அலிஸா ஹிலி, ஜெஸ் ஜோனஸ்ஸன், டெலிஸா கிம்மின்ஸ், சோபி மொலிநிக்ஸ், பெத் மூனி, எல்ஸி பொ்ரி, மேகன் ஷூட், அன்னபெல் சதா்லெண்ட், டயாலா வயாமெனிக், ஜாா்ஜியா வோ்ஹேம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube