டி-20 உலகக்கோப்பை:அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!!

ஆண்களுக்கான  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால்(ICC),  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 2020-  ஆம் ஆண்டு  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இந்நிலையில்  ஆண்களுக்கான  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  2020 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரின் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் 45 போட்டிகள்,மெல்போர்ன், சிட்னி,அடிலெய்ட், பெர்த், ஹொபார்ட், பிரிஸ்பேன் ஆகிய 7 நகரங்களில் உள்ள 7 மைதானங்களில்  நடைபெறுகிறது.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகளில் முதல் 8 அணிகள் நேரடியாக ‘SUPER 12’ சுற்றில் விளையாடுகின்றது.

SUPER 12’ சுற்றின் ‘A’ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடம்பெற்றுள்ளது. ‘B’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.

அக்டோபர் 24 ஆம் தேதி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதே நாளில் மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது

மீதமுள்ள 2  அணிகள் மற்றும் தகுதிச்சுற்றில் வரும் அணிகளுடன் மோதுகின்றது.

முதல் சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ‘SUPER 12’ சுற்றின் ‘A’ பிரிவு, ‘B’ பிரிவு என இரண்டிலும் தலா இரு அணிகள் சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

Leave a Comment