இனிப்பான செய்தி ! 6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு " ஷூ " வழங்க அரசாணை வெளியீடு

6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு " ஷூ " வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி

By Fahad | Published: Apr 06 2020 09:26 PM

6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு " ஷூ " வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .அந்த வகையில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அண்மையில் கூறுகையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்.இது மாணவர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று 6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு " ஷூ " வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,2020-2021 ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.