சுவாமியே சரணம் ஐயப்பா.! நடை திறந்த 27 நாட்களில் ‘ரூ.100 கோடி’ வருமானம்.!

  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை பிரசித்திபெற்றதாகும்.
  • சபரிமலையில் இந்த ஆண்டில் 27 நாட்களில் ரூ.100 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. நடை திறந்த முதல்நாளில் இருந்தே சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது சபரிமலையில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் இருமுடி கட்டு சுமந்த பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்பியபடி சபரிமலைக்கு சென்றவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு கோவிலுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, நடை திறந்து 27 நாட்கள் (டிசம்-14) ஆன நிலையில் உண்டியல் காணிக்கை, பிராசாத விற்பனை போன்றவற்றின் மூலம் கோவிலுக்கு வருமானமாக ரூ.100 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.60 லட்சம் மட்டுமே வருமானமாக கிடைத்திருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தபடி இருப்பதால் பக்தர்களை வரிசையில் போலீசார் சன்னிதானம் நோக்கி அனுப்பி வருகிறார்கள். இதனால் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவசம்போர்டு செய்து கொடுத்து உள்ளது.என தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்