முதலிரவிலேயே சந்தேகம் - தீக்குளித்து தற்கொலை செய்த மணப்பெண்!

முதலிரவிலேயே சந்தேகம் - தீக்குளித்து தற்கொலை செய்த மணப்பெண்!

முதலிரவு அன்றே சந்தேகம் தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்.

வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்ற கல்லூரி விரிவுரையாளரை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி குளியலறையில் புதுப்பெண் சந்திரலேகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரலேகாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சந்திரலேகாவின் அறையில் சோதனை மேற்கொண்டபோது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் எனது கணவர் பாலாஜி முதலிரவு அன்றே என் மீது சந்தேகப்பட்டு நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய் உன்னை யாரும் இதுவரை காதலித்ததில்லையா? அல்லது நீ யாரையும் காதலித்திருக்கிறாயா? என்று கேட்டு டார்ச்சர் செய்தார். என்னை விட்டுவிட்டு காதலித்த பையனுடன் ஓடி விடுவாயா?என அசிங்கமாக பேசி என்னை தினமும் கொடுமைப் படுத்தினார். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் கூட திருமணத்துக்கு முன்பான வாழ்க்கையை சந்தேகப்படும் எதற்கெடுத்தாலும் தவறான முறையில் பேசுகிறார்.

நான் சந்தோசமாக திருமணம் செய்து கொண்டாலும் நினைத்தபடி எனது திருமண வாழ்க்கை அமையவில்லை. எனவே நான் உங்களை விட்டு பிரிகிறேன், தங்கைக்காவது நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று உருக்கத்துடன் எழுதியுள்ளார் சந்திரலேகா. திருமணமான ஒரு வாரத்திலேயே புதுப்பெண் சந்தேகம் தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!