பத்து வருடம் கழித்து மீண்டும் கோதாவில் களமிறங்கும் சுஷ்மிதா சென்..!

சுஷ்மிதா சென் 2010-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் போது  சினிமாவை

By murugan | Published: Dec 10, 2019 11:34 AM

  • சுஷ்மிதா சென் 2010-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் போது  சினிமாவை விட்டு வெளியேறினர்.
  • தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார்.
நடிகை சுஷ்மிதா சென் திங்களன்று இன்ஸ்டாகிராமிற்கு ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார்.நடிகை சுஷ்மிதா சென் 2010 ஆம் ஆண்டு கடைசியாக  வெளியான "நோ ப்ராப்ளம்" என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு வெளியேறினார். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த முடிவு முற்றிலும் ரசிகர்களின் வேண்டு கோளுக்கு இணங்க மட்டுமே மீண்டும் சினிமாவில்  நடிக்க உள்ளதாக சுஷ்மிதா கூறினார். தற்போது சுஷ்மிதா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்அதில் முதல் குழந்தையைத் தத்தெடுத்த போது சினிமாவின் பிசியாக இருந்தததால் சுஷ்மிதா தன் குழந்தை வளர்வதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என விரும்பினார் . இதனால் 2010-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் போது குழந்தையுடன் நேரத்தை செலவு செய்யவேண்டும் என்ற நோக்கில் சினிமாவை விட்டு வெளியேறியதாக நடிகை சுஷ்மிதா சென் ஒரு தனியார்  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.  
Step2: Place in ads Display sections

unicc