என்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது!

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தின் சூட்டிங் இந்த முடியாத காரணத்தினால் செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நம்ம வீட்டு பிள்ளையும் காப்பானும்  மோத அதிக வாய்ப்புள்ளது.

ஒருவேளை இரு படங்களும் வெவ்வேறு தேதி ரிலீஸ் ஆனாலும், அடுத்ததாக வெளிவர இருக்கும் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் டிசம்பர் 20 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. அதேபோல இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா  இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சூரரைப் போற்று படமும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் எப்படியும் சூர்யா சிவகார்த்திகேயன் போட்டி கண்டிப்பாக இந்த வருடம் இருக்கும் என கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.